வடமராட்சி கடல் நீரேரி

(வடமராட்சி நீரேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடமராட்சி கடல் நீரேரி (Vadamarachchi Lagoon) என்பது இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு கடல் நீரேரி ஆகும். இது தொண்டைமானாறு கடல் நீரேரி எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக்கடல் நீரேரி வடமராட்சியை வலிகாமம் மற்றும் தென்மராட்சி வலயங்களில் இருந்து பிரிக்கிறது.

வடமராட்சி கடல் நீரேரி
அமைவிடம்யாழ்ப்பாணம் மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்9°42′N 80°18′E / 9.700°N 80.300°E / 9.700; 80.300
வகைகடல் நீரேரி
முதன்மை வெளியேற்றம்இந்து சமுத்திரம்
மேற்பரப்பளவு77.87 சதுர கிலோமீட்டர்கள் (30.07 sq mi)
அதிகபட்ச ஆழம்2 மீட்டர்கள் (6.6 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்

இந்தக் கடல் நீரேரி யாழ்ப்பாணத்தின் வடக்கிலுள்ள இந்து சமுத்திரத்துடன் ஒரு சிறிய கால்வாயூடாக சென்று தொண்டைமானாறுக்கு அருகில் இணைகிறது. இங்கு உப்பு நீரும் உப்புக் கலந்த நிறைந்திருக்கின்றது. இந்தக் கடல் நீரேரியில் கடல் நீர் கலப்பதைத் தவிர்க்க தொண்டைமானாறில் மதகைக் கதவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.[1]

இந்தக் கடல் நீரேரி அடர்த்தியாக வளர்ந்த பனை மரங்கள், தென்னை மரங்கள், புல்வெளிகள், நெல் நிலங்கள், திறந்தவெளிக் காடுகள் என்பவற்றால் சூழப்பட்டுள்ளது.

இந்தக் கடல் நீரேரி அமெரிக்கன் பிளெமிங்கோ, வாத்து, டெரன்ஸ், கல்ஸ் போன்ற நீர்ப்பறவைகளைக் கவரும் இடமாக உள்ளது.

உசாத்துணைகள்

தொகு
  • S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
  1. "Thondamannar sluice gate to be reconstructed". தமிழ்நெட். 3 January 2004. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமராட்சி_கடல்_நீரேரி&oldid=3575875" இலிருந்து மீள்விக்கப்பட்டது