வட அமெரிக்க பலூச் பேரவை

வட அமெரிக்காவின் பலூச் பேரவை (Baloch Council of North America) என்பது அமெரிக்காவில் இருந்து செயல்படும் பாரபட்சமற்ற, இலாப நோக்கற்ற காத்துபேசல் அமைப்பாகும். இது "அனைத்து பலூச் மக்களையும் ஒன்றிணைத்து, பாக்கித்தான் கூட்டமைப்பிற்குள் சுயநிர்ணய உரிமை உட்பட பலூச் உரிமைகளைப் பாதுகாக்க" முயல்கிறது.[1][2] வட அமெரிக்காவின் பலூச் பேரவை என்பது புலம்பெர்ந்த பலூச் மக்களிடையே வேரூன்றி அரசியல் ரீதியாக செயல்படும் பல அமைப்புகளில் ஒன்றாகும். உருசியாவில் பலோச் ஒற்றுமை மற்றும் பிரான்சில் உள்ள பலோச் குரல் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இது பணியாற்றுகிறது.

வட அமெரிக்க பலூச் பேரவை
உருவாக்கம்2004
தலைமையகம்1629 கே தெரு என்.டபிள்யூ 300
வாசிங்டன், டி. சி., அமெரிக்கா
20036
தலைவர்வட அமெரிக்க பலூச் பேரவை[1]

வரலாறு

தொகு

வட அமெரிக்க பலூச் பேரவையானது முதலில் பி. எஸ். ஓ-என். ஏ அல்லது வட அமெரிக்காவின் பலோச் சொசைட்டியாக 2004 இல் வாசிங்டன், டி. சி.யில் டாக்டர் வாஹித் பலோச்சால் நிறுவப்பட்டது. டாக்டர் வாஹித் பலோச் 1990 இல் குவெட்டாவில் உள்ள போலன் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் 1992 இல் இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.[3] வட அமெரிக்காவின் பலோச் சொசைட்டியானது அமெரிக்க அரசாங்கத்தையும் இசுரேலிய அரசியல் ஆர்வலர்களையும் பலூசிஸ்தானத்தின் விடுதலையை ஆதரிக்குமாறு வற்புறுத்தியது. பலூச் மற்றும் பலூசிஸ்தானின் அமெரிக்க நண்பர்கள் மற்றும் வட அமெரிக்காவின் பலூச் பேரவைப் பிரதிநிதிகள் அமெரிக்க காங்கிரஸ்காரர்களை சந்தித்தனர் மேலும் பல சி.ஐ.ஏ அதிகாரிகளையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. பலூச் மக்களை பாக்கித்தான் அரசு இனப்படுகொலைச் செயவதாகவும், மாகாணத்தின் பரந்த அளவில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிப்பதே அரசின் நோக்கம் என்றும் டாக்டர் பலூச் நீண்ட காலமாக கூறி வந்தார்.[4] 2014 சனவரியில் அவர் பலூச் மக்களை "கொலைக் களத்தில்" இருந்து காக்க நேரடி உதவி செய்ய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை வெளியிட்டார்.[3][1]

கலைப்பும் மறுசீரமைப்பும்

தொகு

டாக்டர் பலோச் தனது அமைப்பை 2014 ஆம் ஆண்டில் கலைத்து, மனித உரிமைகளுக்கு போராட முக்கியத்துவம் அளிக்கும் விதமாக மறுகட்டமைத்தார்.[5] பலூசித்தானுக்கான விடுதலைப் போர் உண்மையில் " கான்கள், நவாப்கள், சர்தார்களின் சுதந்திரப் போர்" என்று கூறி, டாக்டர் பலூச் பலோச் சொசைட்டிடைக் கலைத்தார்.[6] பாக்கித்தான் கூட்டமைப்பிற்குள், சனநாயக, வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் பலூச் உரிமைகளைப் பெறுவதற்காக பாக்கித்தானில் உள்ள அனைத்து சனநாயக மற்றும் தேசிய சக்திகளுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்ட வட அமெரிக்க பலூச் பேரவை (பி.சி. என்) என அவர் பேரவையை மறுகட்டமைத்தார்.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "BCNA rewriting Baloch history". Daily Times. 17 November 2014 இம் மூலத்தில் இருந்து 22 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220222170722/https://dailytimes.com.pk/102494/bcna-rewriting-baloch-history/amp/. 
  2. "Baloch Society of North America disassociates from the so-called war of independence of Khans, Nawabs and Sardars of Balochistan". Balochistan News Network. May 26, 2014. Archived from the original on Feb 6, 2016.
  3. 3.0 3.1 Khalid, Zaki (2014-07-15). "Influential Baloch lobby group in US decides to end activism against Pakistan". Terminal X. Archived from the original on December 22, 2015.
  4. "Voice of Baloch Nationalists in powerful US congress forum". Pakistan Christian Post. 8 February 2012 இம் மூலத்தில் இருந்து 2 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160302091739/http://www.pakistanchristianpost.com/headlinenewsd.php?hnewsid=3313. 
  5. Anwar Iqbal (9 June 2014). "Overseas Baloch group to struggle for rights within federation". Dawn. http://www.dawn.com/news/1111522. 
  6. 6.0 6.1 Iqbal, Anwar (9 June 2014). "Overseas Baloch group to struggle for rights within federation" (in en). DAWN.COM இம் மூலத்தில் இருந்து 12 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171012045249/https://www.dawn.com/news/1111522. 
  7. "Baloch Society of North America (BSO-NA)". Bso-na.blogspot.com. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_அமெரிக்க_பலூச்_பேரவை&oldid=3920628" இலிருந்து மீள்விக்கப்பட்டது