வண்ணச் சிறைப்பு
வண்ணச் சிறைப்பு (Color confinement) அல்லது பொதுவாக சிறைப்பு என்பது குவார்க்குகள் போன்ற வண்ண ஊட்டமுற்ற துகள்களைத் தனியாகப் பிரிக்க இயலாது சிறைப்பட்டுள்ள நிகழ்வைக் குறிக்கிறது. எனவே இவற்றைத் தனியாகப் பார்க்கவே முடியாது.[1] குவார்க்குகள் இயல்பாக வன்மன்கள் போல குழுவில் தான் நிலவும். வன்மன்களில் இருவகையுண்டு. ஒருவகை மேசான்கள் ஆகும். மற்றொருவகை பேரியான்கள் ஆகும். மேசானில் ஒரு குவார்க்கும் ஓர் எதிர்குவார்க்கும் அமையும், பேரியானில் மூன்று குவார்க்குகள் இருக்கும்.
தாய் வன்மனில் இருந்து உள்ளடங்கிய குவார்க்குகளைப் பிரிக்க முடியாது. எனவே தான் குவார்க்கை வன்மன் மட்டத்திலன்றி, தனியாகக் காணவோ ஆய்வு செய்யவோ முடியாது.[2]
தோற்றம்
தொகுகுவார்க்கின் இந்தச் சிறைப்பட்டநிலைக்கான காறணம் சிக்கலானதாகும்;குவைய வண்ண இயக்கவியல் சிறைப்போடு அமையவேண்டும் என பகுப்பாய்வேதும் நிறுவ வில்லை. சிறைப்புக்கான நடப்புக் கோட்பாடு வண்ண ஊட்டமுள்ள விசைதங்கும் பசையன்களால் ஏற்படுவதாகும். மின்னூட்டமுள்ள எவ்விரு மின்துகள்களும் தனித்துப் பிரிவதைப் போல, அவற்றிடையே உள்ள மின்புலம் குறையக் குறைய மின்னன்கள் அணுக்கருவில் இருந்து பிரிந்து கட்டற்ற நிலையை அடைவதைப் போல பிரிந்து விடுதலையாக வெளியேறுகின்றன. ஒரு தனி குவார்க்கு-எதிர்குவார்க்கு இணை பிரிந்ததுமே பசையன் அவற்றிடையே குறுகலான குழல் அல்லது வண்ணப்புலச் சரத்தை உருவாக்குகிறது. இது நேர், எதிர்மின்னூட்டங்களால் ஏற்படும் மின்புலத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மின்புலம் சூழ்வெளி யெங்கும் விரிந்து தொலைவு கூடக்கூட அருகிவிடும். அனால் பசையன் புலம் தன் நட்த்தையால் தொலைவைச் சாராத ஒரு வன்புல விசை இரு குவார்க்குகளின் இடையே தொடர்ந்து செயல்படும்.[3][4] இதன் வலிமை ஏறத்தாழ 160,000 நியூட்டன்களாகும். இது 80,000 கிகி பொருண்மையை நொடிக்கு 2 மீட்டர்கள் அளவு முடுக்கத்தை ஊட்டத் தேவைப்படும் விசைக்குச் சமமாகும். [சான்று தேவை].
துகள் முடுக்கியின் மோதல்களில் நிகழ்வதைப் போல இரு குவார்க்குகள் ஒருநிலையில் தனித்துப் பிரியும்போது ஆற்றலைப் பொறுத்தவரையில், குழல் மேலும் நீள்வதைவிட, தன்னியல்பாக புதிய குவார்க்கு-எதிர்குவார்க்கு இணை தோன்றலே ஏற்புடையதாக அமைகிறது. இந்த விளைவால் துகள்முடுக்கிகளில் குவார்க்குகள் உருவாகியதுமே தனித்தனி குவார்க்குகளைக் காணமுடியாமல், அறிவியலாளர்கள் வண்ணவியலாக நொதுமலான, கொத்துக் கொத்தாக ஒன்றிய மேசான்கள், அடரன்கள், துகள்களை அதாவது "தாரைகளைப்" பார்க்கின்றனர். இந்நிகழ்வு வன்மனாதல் அல்லது துண்டாதல் அல்லது சரம்பிரிதல் எனப்படுகிறது. இது துகள் இயற்பியலில் மிகவும் புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வாக உள்ளது.
சிறைப்புக் கட்டம் வழக்கமாக வில்சன் கண்ணியின் செயல்பாட்டு நடத்தையால் வரையறுக்கப்படுகிறது. வில்சன் கண்ணி என்பது ஒருநிலையில் உருவாகியும் ஒருநிலையில் அழிந்தும் தோன்றும் குவார்க்கு-எதிர்குவார்க்கு இணை பின்பற்றும் எளிய வெளிக்காலத் தடமாகும். சிறைப்படாமைக் கோட்பாட்டில் இவ்வகைக் கண்ணியின் செயல்பாடு அதன் சுற்றளவைச் சார்ந்த்ருக்கும். என்றலும் சிறைப்புக் கோட்பாட்டில் மாறாக அதன் பரப்பைச் சார்ந்தமையும். இப்பரப்பு குவார்க்கு-எதிர்குவார்க்கு பிரிதலுக்கு நேர்விகித்த்தில் அமைவதால் விடுபட்ட குவார்க்குகள் அடக்கப்படுகின்றன. மேசான்கள் மட்டுமே நிலவ விடப்படுகின்றன, இது ஒரு கண்ணி மற்றொரு எதிர்த்திசையில் அமைந்த கண்ணியுடன் இணையும்போது கண்ணிகளுக்கிடையே அமையும் பரப்பு மிகச் சிறியதாகி விடுவதால் நிகழ்கிறது.
சிறைப்புள்ள படிமங்கள்
தொகுமுழுத்திரையுள்ள குவார்க்குப் படிமங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ V. Barger, R. Phillips (1997). Collider Physics. Addison–Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-14945-1.
- ↑ T.-Y. Wu, W.-Y. Pauchy Hwang (1991). Relativistic quantum mechanics and quantum fields. வேர்ல்டு சயின்டிபிக். p. 321. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-02-0608-9.
- ↑ T. Muta (2009). Foundations of quantum chromodynamics: an introduction to perturbative methods in gauge theories (3rd ed.). World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-279-353-9.
- ↑ A. Smilga (2001). Lectures on quantum chromodynamics. World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-02-4331-9.