வனேடியம்(II) அயோடைடு

வேதிச் சேர்மம்

வனேடியம்(II) அயோடைடு (Vanadium(II) iodide) என்பது VI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் மைக்காவை ஒத்த திண்மமாக இது காணப்படுகிறது. எண்முக வனேடியம்(II) மையங்கள் கொண்ட காட்மியம் அயோடைடு கட்டமைப்பை வனேடியம்(II) அயோடைடும் ஏற்கிறது.[1] வனேடியம்(II) அயோடைடின் அறுநீரேற்று சேர்மமும் அறியப்படுகிறது. ஊதா நிற படிகங்களாக இது உருவாகிறது.

வனேடியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
15513-84-5 Y
ChemSpider 76640
EC number 239-545-6
InChI
  • InChI=1S/2HI.V/h2*1H;/q;;+2/p-2
    Key: OJFNQCZRUJTCOZ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 84959
  • [V+2].[I-].[I-]
பண்புகள்
VI2
தோற்றம் கருப்பு நிற மைக்கா போன்றது
அடர்த்தி 5.44 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வனேடியம், அயோடின் தனிமங்கள் வினைபுரிந்து வனேடியம்(II) அயோடைடு உருவாகிறது.[1]

மும்மெத்தில்சிலில் அயோடைடுடன்[2] வனேடியம்(III) குளோரைடு சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் கரைக்கப்பட்ட வனேடியம்(II) அயோடைடுகளை தயாரிக்கலாம். இது நீரற்ற அம்மோனியாவுடன் வினைபுரிந்து எக்சா அமீன் அணைவுகளைக் கொடுக்கிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Klemm, Wilhelm; Grimm, Ludwig (1942). "Zur Kenntnis der Dihalogenide des Titans und Vanadins". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 249 (2): 198–208. doi:10.1002/zaac.19422490204. 
  2. Hitchcock, Peter B.; Hughes, David L.; Leigh, G. Jeffery; Sanders, J. Roger; De Souza, Jaisa; McGarry, Celine J.; Larkworthy, Leslie F. (1994). "Preparation of New Vanadium(II) Iodides and Crystal Structure of Hexakis(acetonitrile)vanadium(II)(Tetraiodide)". Journal of the Chemical Society, Dalton Transactions (24): 3683. doi:10.1039/DT9940003683. 
  3. Eßmann, Ralf; Kreiner, Guido; Niemann, Anke; Rechenbach, Dirk; Schmieding, Axel; Sichla, Thomas; Zachwieja, Uwe; Jacobs, Herbert (1996). "Isotype Strukturen einiger Hexaamminmetall(II)-halogenide von 3d-Metallen: V(NH3)6I2, Cr(NH3)6I2, Mn(NH3)6Cl2, Fe(NH3)6Cl2, Fe(NH3)6Br2, Co(NH3)6Br2 und Ni(NH3)6Cl2". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 622 (7): 1161–1166. doi:10.1002/zaac.19966220709. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(II)_அயோடைடு&oldid=3915404" இலிருந்து மீள்விக்கப்பட்டது