வனேடியம்(V) புளோரைடு

வனேடியம்(V) புளோரைடு (Vanadium(V) fluoride) என்பது VF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வனேடியத்த்தின் அறியப்பட்டுள்ள ஒரேயொரு ஐந்தாலைடு இச்சேர்மம் மட்டுமேயாகும். ஒரு திண்மப் பொருளாக இது ஒரு முடிவற்ற பல்லுறுப்பியாக உருவாகிறது[1]அறை வெப்பநிலை மற்றும் சாதாரண அழுத்தத்தில் இது துரிதமாக ஆவியாகும் திரவமாக இருக்கிறது. இதனுடைய வாயு ஐந்து ஒருங்கிணைப்புகள் கொண்ட ஒருமங்களைக் கொண்டுள்ளது.[2]

வனேடியம்(V) புளோரைடு
Vanadium(V) fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(V) புளோரைடு
வேறு பெயர்கள்
வனேடியம் ஐம்புளோரைடு
இனங்காட்டிகள்
7783-72-4
பப்கெம் 165641
பண்புகள்
VF5
வாய்ப்பாட்டு எடை 145.934
தோற்றம் நிறமற்ற திண்மம்.
அடர்த்தி 2.502 கி/செ.மீ3 (திண்மம்)
உருகுநிலை 19.5 °C (67.1 °F; 292.6 K)
கொதிநிலை 48.3 °C (118.9 °F; 321.4 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நையோபியம்(V) புளோரைடு
தைட்டானியம்(V) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வனேடியம் உலோகத்தை புளோரினேற்றம் செய்வதன் மூலமாக வனேடியம்(V) புளோரைடைத் தொகுப்பு முறையில் தயாரிக்கலாம்:[2][3].

2 V + 5 F2 → 2 VF5

வனேடியம் நான்குபுளோரைடை விகிதச்சமமாதலின்மை வினைக்கு உட்படுத்தினால் சம அளவு திண்ம முப்புளோரைடு மற்றும் துரிதமாக ஆவியாகும் ஐம்புளோரைடுகளாக பிரிகிறது:[4][5][6].

இம்மாற்றம் 650 ° செ வெப்பநிலையில் நிகழ்கிறது.

பண்புகள்

தொகு

மற்ற எலக்ட்ரான் கவர் உலோக ஆலைடுகள் போலவே இதுவும் முதலில் ஒரு ஆக்சி ஆலைடாக நீராற்பகுக்கப்படுகிறது.

VF5 + H2O → VOF3 + 2 HF

பின்னர் இரும ஆக்சைடாக மாறுகிறது.

2 VOF3 + 3 H2O → V2O5 + 6 HF

காரத்தின் முன்னிலையில் இந்நீராற்பகுப்பு வினை முடுக்கப்படுகிறது. நீராற்பகுப்பு அடைகின்ற தன்மை பெற்றிருத போதிலும் இது ஆல்ககால்களில் கரைகிறது.

இது ஒரு இலூயிக் அமிலமாகும்.:[7][8][9]

VF5 + KF → KVF6

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. 2.0 2.1 Trevorrow, L. E.; Fischer, J.; Steunenberg, R. K. (1957). "The Preparation and Properties of Vanadium Pentafluoride". Journal of the American Chemical Society 79 (19): 5167–5168. doi:10.1021/ja01576a023. 
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  4. Otto Ruff; Lickfett, Herbert (1911). "Vanadinfluoride". Berichte der deutschen chemischen Gesellschaft 44 (3): 2539–2549. doi:10.1002/cber.19110440379. 
  5. Cavell, R. G.; Clark, H. C. (1963). "Thermochemistry of vanadium fluorides". Transactions of the Faraday Society 59: 2706. doi:10.1039/TF9635902706. 
  6. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  7. Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. (உருசிய மொழியில்)
  8. Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-85270-092-6 (உருசிய மொழியில்)
  9. Лидин Р.А. и др. Химические свойства неорганических веществ: Учеб. пособие для вузов. — 3-е изд., испр. — М.: Химия, 2000. — 480 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-7245-1163-0 (உருசிய மொழியில்)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(V)_புளோரைடு&oldid=4092297" இலிருந்து மீள்விக்கப்பட்டது