வனேடியோகார்ப்போலைட்டு
வனேடியோகார்ப்போலைட்டு (Vanadiocarpholite)Mn+2V+3AlSi2O6(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வனேடியத்தின் சிலிக்கேட்டு வகைக் கனிமமாகும். வைக்கோல் மஞ்சள் நிறத்தில் நேர்சாய்சதுர படிகவடிவில் இது படிகமாகிறது. வனேடியம் மிகுந்திருக்கும் கார்ப்போலைட்டு வகை கனிமமாக (Mn+2Al2Si2O6(OH)4) இருப்பதால் இதை வனேடியோகார்ப்போலைட்டு என்ற பெயரால் அழைக்கிறார்கள்.
வனேடியோகார்ப்போலைட்டு Vanadiocarpholite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Mn+2V+3AlSi2O6(OH)4 |
இனங்காணல் | |
நிறம் | வெளிர்-வைக்கோல் மஞ்சள், மஞ்சளும் பழுப்பும் |
படிக இயல்பு | ஊசிவடிவ படிகக் கொத்துகள் விரிசலிழை நிரப்பிகளாக |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
பிளப்பு | {010} இல் தெளிவாக |
விகுவுத் தன்மை | நெகிழும் |
மிளிர்வு | பட்டுப் போல் பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα=1.684, nβ=1.691, nγ=1.7 |
இரட்டை ஒளிவிலகல் | 0.0160 |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் வனேடியோகார்ப்போலைட்டு கனிமத்தை Vcar[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
தொகுமுதன் முதலில். இத்தாலி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள இலிகுரியா மண்டலத்தின் கெனோவா மாகாணத்தில் 2005 ஆம் ஆண்டு வனேடியோகார்ப்போலைட்டு கண்டறியப்பட்டது. இங்குள்ள கிராவெக்லியா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மோலினெல்லோ சுரங்கத்தில் இக்கனிமம் வெட்டியெடுக்கப்படுகிறது. [2] மாங்கனீசு தாதுப் படிவுகளில் செர்ட்டு வகை படிவுப் பாறை புதைபடிவச் சேர்மமாக வனேடியோகார்ப்போலைட்டு கிடைக்கிறது. [1]
வேதி இயைபு
தொகுவனேடியோகார்போலைட்டில் பின்வருமாறு தனிமங்கள் சேர்ந்துள்ளன:[1]
மாங்கனீசு | 15.56% | Mn | 20.09% | MnO |
அலுமினியம் | 7.64% | Al | 14.44% | Al2O3 |
வனேடியம் | 14.43% | V | 21.23% | V2O3 |
சிலிக்கான் | 15.91% | Si | 34.04% | SiO2 |
ஐதரசன் | 1.14% | H | 10.21% | H2O |
ஆக்சிசன் | 45.32% | O |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Vanadiocarpholite data on Webmineral.com
- ↑ 2.0 2.1 Vanadiocarpholite on Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.