வயநாடு காந்தகசாலா அரிசி
வயநாடு காந்தகசாலா அரிசி என்பது கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் ஒருவகை அரிசியாகும். வயநாடு மாவட்டத்திலுள்ள பனமரம், சுல்தான் பத்தேரி, மற்றும் மனந்தவாடி ஆகிய பகுதிகளில் இந்த வகை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகுதிகளி உள்ள பழங்குடி சமூகங்களின் உறுப்பினர்களால் பெரும்பாலும் பயிரிடப்படும் அரிசி வகை காந்தக சாலா அரிசி வகை ஆகும்.[1] 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, காந்தகசாலா அரிசி வகை 327 ஹெக்டேர் பரப்பிலும், ஜீரகசலா அரிசி வகை 22 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.[2] வயநாட்டில் பயிரிடப்படும் இரண்டு வகையான வாசனை நெல் வகைகளில் காந்தகசாலா நெல் வகையும் ஒன்றாகும். மற்றொன்று ஜீரகசலா அரிசிவகையாகும் . இவ்விரண்டு வகைகளும் பாஸ்மதி அரிசி மற்றும் மல்லிகை அரிசி போன்ற நறுமணமுள்ள அரிசி வகைகளுடன் போட்டியிடும் திறன் கொண்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.[3][4] நோயைத் தடுக்கும் பண்புகள், அதிக ஊட்டச்சத்து மதிப்பு, சிறந்த சுவை மற்றும் சமையல் பண்புகள் காரணமாக, இந்த வகை காந்தகசாலா மற்றும் ஜீரகசாலா அரிசி வகைகள் பாரம்பரியமாக திருமண விருந்துகள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வகைப்படுத்துதல்
தொகுகாந்தகசாலா அரிசியை உருவாக்கிய தேசிய தாவர மரபணு வள பணியகம் (NBPGR) மற்றும் சர்வதேச தாவர மரபணு வள நிறுவனம் (IPGRI) ஆகியவை உருவாக்கிய விவரிப்புகளின் அடிப்படையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) இந்த வகை அரிசியை வகைப்படுத்தியுள்ளது.[5] இந்த நெல்லுக்கான பண்புகளை விவரிக்க 40 க்கும் மேற்பட்ட விளக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் நிறுவிய, வயநாட்டின் கல்பேட்டாவில் உள்ள, சமூக வேளாண் பல்லுயிர் மையம் 1997 முதல் இந்த சிறப்பு வகை அரிசியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.[6]
உழவர் வகைகளுக்கான சான்றிதழ்
தொகுகாந்தகாசலத்தின் நெல் விதைகள், ஜீரகாசலா மற்றும் மேலும் நான்கு வகைகளுக்கு, ‘உழவர் வகைகள்’ என்ற சான்றிதழைப் பயிர்வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையம், வேளாண் அமைச்சகம், இந்திய அரசு ஆகியவற்றின் விதிகளின் கீழ் உழவர் வகைகளாகச் சான்றிதழ் வழங்கப்பட்டது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் சமூக வேளாண் பல்லுயிர் மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் வயநாட்டின் பாரம்பரிய நெல் சாகுபடியாளர்களின் சங்கமான சீட் கேரின் (விதைப் பாதுகாப்பு) முயற்சியால் இது சாத்தியமானது. தேசிய அளவில், இந்த சான்றிதழ் இதுவரை 545 வகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் வயநாடு அரிசி வகைகள் தனித்துவமானவை, ஏனெனில் இச்சான்றிதழ் ஒரு "உழவர் சமூகத்திற்கு" வழங்கப்பட்ட பிரிவின் கீழ் உள்ளது.[7]
புவியியல் சார்ந்த குறியீடு பதிவு
தொகுஜீரகசலா அரிசி மற்றும் காந்தகசாலா அரிசி இரண்டும் 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசின் புவியியல் சார்ந்த குறியீடுகள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வயநாடு ஜில்லா நெல்லுப்படக்க கர்ஷகா சமிதி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்பட்டது. இது வேளாண்-சுற்றுச்சூழல் நிலைமைகள், இயற்கைக் கரிம சாகுபடி முறைகள், சாகுபடிகளின் பாரம்பரிய மரபணு தயாரிப்பு மற்றும் தனித்துவமான செயலாக்க தொழில்நுட்பங்கள் ஆகியவை ஜீரகசலா மற்றும் காந்தகாசலா அரிசி வகைகளின் குறிப்பிட்ட நறுமணத்தையும் சுவையையும் உருவாக்கியுள்ளன.[8]
குறிப்புகள்
தொகு- ↑ GI-tagged rice varieties to get a boost. http://www.thehindu.com/news/national/kerala/gitagged-rice-varieties-to-get-a-boost/article6309995.ece. பார்த்த நாள்: 4 February 2016.
- ↑ "Morphological and biochemical characterization of aromatic rice(Oryza Sativa L.) cultivars of Wayanad district of Kerala". Kerala Agricultaral university. Archived from the original on 23 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Wayanad rice set to boil in Germany. http://www.newindianexpress.com/cities/chennai/Wayanad-rice-set-to-boil-in-Germany/2013/10/09/article1826452.ece. பார்த்த நாள்: 4 February 2016.
- ↑ "Marketing Gandhakasal" (PDF). University of Passau, jointly with Bio Viva and MSSRF. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
- ↑ Thirteenth annual Report 2002 - 2003 (PDF). Chennai: M. S. swaminathan research Foundation, Centre for Research on Sustainable Agricultural and Rural Development. p. 74. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Wayanad: : A hotspot of wildlifeI and agrobiodiversity in Western Ghats" (PDF). MSSRF, Community Agrobiodiversity Center, Kalpetta. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Twenty-Third Annual report 2012 - 13 (PDF). Chennai: M. S. Swaminathan Research Foundation Centre for Research on Sustainable Agricultural and Rural Development. p. 5. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Special correspondent (7 November 2010). "GI registration for three farm products". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/gi-registration-for-three-farm-products/article872203.ece. பார்த்த நாள்: 5 February 2016.