வயோமித்ரா

இந்திய இயந்திர மனிதன்

வயோமித்ரா (Vyommitra) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பெண் தோற்றமுள்ள இயந்திர மனிதனாகும். விண்வெளிப் பயணத்திற்காக இந்த இயந்திர மனிதன் உருவாக்கப்பட்டுள்ளது.[1] இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டத்திற்காக இது உருவாக்கப்பட்டது.[2] வயோமித்ரா இயந்திர மனிதன் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 22 அன்று பெங்களூருவில் நடந்த மனித விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு குறித்தான கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.[3][4]

வயோமித்ரா
Vyommitra
உற்பத்தியாளர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
நாடுஇந்தியா
படைத்த ஆண்டு2020
வகைஇயந்திர மனிதன்
நோக்கம்விண்வெளிக்குப் பயணிக்கும் இயந்திரமனிதன்

வயோமித்ராவை விண்வெளிக்கு அனுப்ப இசுரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிப் பயணங்களில் வயோமித்ரா இந்திய விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயணிக்கும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக ககன்யான் பயணங்களின் ஒரு பகுதியாக ஆளில்லா விண்வெளிப் பயணங்களுக்கு ஒரு விஞ்ஞானியைப் போல வயோமித்ரா சென்று வரும்.[5][6]

நோக்கங்களும் திறன்களும்

தொகு

மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட பிற நாடுகளைப் போலல்லாமல், சோதனைப் விண்வெளிப் பயணங்களில் விலங்குகளைப் பறக்கவிடாமல் இயந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்புவுதை இசுரோ நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் விண்வெளியில் நீண்ட கால இடைவெளியில் மனித உடலுக்கு எடையற்ற தன்மையும் கதிர்வீச்சும் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு வயோமித்ரா போன்ற இயந்திர மனிதர்கள் உதவியாக இருப்பார்கள் என இசுரோ கருதுகிறது.[7]

ஆளில்லா விண்கலத்தில் செல்லும் வயோமித்ரா நுண்புவியீர்ப்பு சோதனைகளை மேற்கொண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் போது வயோமித்ரா இத்தகைய நுண்ணீர்ப்பு சக்தி சூழல்களில் மனிதர்களுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேசுவதற்கும் பல வேறுபட்ட பணிகளைச் செய்வதற்காகவும் இந்த வயோமித்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது.[8][9][10][11] மனித செயல்பாட்டை வயோமித்ரா பிரதிபலிக்கும். பிற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும். தொழில்நுட்ப ரீதியாக சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் உயிர் வாழ்க்கைக்கான ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகளைச் செய்யும். ம், மின் இணைப்பு பலகைகளின் செயல்பாடுகளைக் கையாளும். சுற்றுச்சூழல் காற்று அழுத்த மாற்ற எச்சரிக்கைகளையும் வழங்கும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "வயோமித்ரா ரோபோ". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE&action=edit. பார்த்த நாள்: 9 June 2021. 
  2. "`முதல் மனித உருகொண்ட ரோபோ!' - இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் கலக்கவிருக்கும் `வியோமித்ரா!'". பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  3. Dwarakanath, Nagarjun (22 January 2020). "Gaganyaan mission: Meet Vyommitra, the talking human robot that Isro will send to space". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "IAA-ISRO-ASI Symposium on Human Space Flight and Exploration was organised at Bangalore". www.isro.gov.in. 2020-01-24. Archived from the original on 2022-08-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
  5. 5.0 5.1 "Meet Vyom Mitra, first Indian 'woman' to ride to space" (in en-IN). The Hindu. 2020-01-22. https://www.thehindu.com/sci-tech/science/isro-to-send-lady-robot-vyomamitra-in-unmanned-gaganyaan-spacecraft-ahead-of-human-spaceflight/article30625261.ece. 
  6. "வாவ்.. இங்க பாருங்க க்யூட் பொண்ணு. பேரு வயோமித்ரா. விண்வெளிக்குப் போகப் போகுது. இசுரோ அசத்தல்". https://tamil.oneindia.com/news/bangalore/vyommitra-the-humanoid-for-gaganyaan-unveiled-by-isro-374792.html. பார்த்த நாள்: 9 June 2021. 
  7. "Why is India sending robots into space?" (in en). 2019-07-25. https://www.bbc.com/news/world-asia-india-48918280. 
  8. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  9. "ISRO's manned mission to Moon will happen, but not right now: K Sivan". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  10. "'व्योममित्रा'ची पहिली झलक! भारताकडून 'ती' पहिल्यांदा जाणार अवकाशात". Loksatta (in மராத்தி). 2020-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  11. "ISRO's prototype humanoid for Gaganyaan mission is Vyom Mitra which will go to space before astronauts". www.timesnownews.com (in ஆங்கிலம்). 2020-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயோமித்ரா&oldid=3756071" இலிருந்து மீள்விக்கப்பட்டது