வராகி கோயில்
வராகி கோயில் (Varahi Deula), இந்திய மாநிலமான ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் புரி மாவட்டத்தில் சௌரசி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சப்தமாதர்களில் ஒருவரான வராகி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
வராகி கோயில் | |
---|---|
கருவறையில் மீனையும், கிண்ணத்தையும் தாங்கி நிற்கும் அன்னை வராகி | |
பெயர் | |
ஒரியா: | ବାରାହୀ ଦେଉଳ |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஒடிசா |
மாவட்டம்: | சௌரசி, புரி மாவட்டம் |
அமைவு: | புரி |
ஆள்கூறுகள்: | 20°3′30.73″N 86°7′6.5″E / 20.0585361°N 86.118472°E |
கோயில் தகவல்கள் |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் கலிங்கர்களால் பொ.ஊ. 10ம் நூற்றாண்டில் மணற்கற்களால் நிறுவப்பட்டது.
இக்கோயிலின் நீளம், அகலம், உயரம் முறையே 15.84 மீ x 8.23 மீ x 8.40 மீட்டர் என்ற அளவில் உள்ளது.[1] வராகி அம்மன் கோயில் அரைக் கோள வடிவத்தில் அமைந்துள்ளது.
வராகி கோயிலின் சிறப்புகள்
தொகுஉள்ளூர் மக்கள் வராகி அம்மனை மீன் வராகி அம்மன் என்று அழைக்கின்றனர். கோயில் கருவறையில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ள வராகி அம்மன் நெற்றிக்கண் கொண்டுள்ளார். வராகி அம்மன் இடது கையில் கிண்ணமும், வலது கையில் மீனையும் தாங்கியுள்ளார். வராகி அம்மனுக்கு நாள்தோறும் மீன் அன்னம் படையல் இடப்படுகிறது.
அமைவிடம்
தொகுகொனார்க் சூரியன் கோயிலிருந்து 30 கிமீ தொலைவிலும், புரி நகரத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், புவனேசுவரம் நகரத்திலிருந்து 62 கிமீ தொலைவிலும் சௌரசி வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- The sculptures of Varahi Temple near Konark பரணிடப்பட்டது 2012-09-30 at the வந்தவழி இயந்திரம்
- Evidences of Khakhara style of temple architecture in Ancient Kalinga
- http://odisha.gov.in/e-magazine/Orissareview/sept-oct2007/engpdf/Pages37-39.pdf