வரிக்கசேரி மனை
வரிக்கசேரி மனை (மலையாளம்: വരിക്കാശേരി മന) அல்லது வரிக்குமசேரி மனை என்று அழைக்கப்படுவது கேரளத்தின் பழமையான பாரம்பரிய உயர்குடி நம்பூதிரி குடும்ப வீடுகளில் ஒன்றாகும். ஏறக்குறைய 4 ஏக்கர் நிலப்பரப்பில் கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், பாலக்காட்டில் ஒற்றப்பாலத்தில் உள்ள மணிசேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது மலையாள படங்களுக்கான பிரபலமான படப்பிடிப்பு இடமாகும், மேலும் வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களான தேவசுரம், ஆராம் தம்புரான், ராப்பக்கல் போன்ற பல படங்கள் இதன் வளாகத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
வரிக்கசேரி மனை | |
---|---|
വരിക്കാശ്ശേരി മന | |
மாற்றுப் பெயர்கள் | வரிக்குமசேரி மனை |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | கேரளக் கட்டக்கலை |
இடம் | கேரளம், பாலக்காடு, ஒற்றப்பாலம், மணி சேரி |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 10°46′16″N 76°20′14″E / 10.77111°N 76.33722°E |
மதிப்பிடப்பட்ட நிறைவு | 1902 |
உரிமையாளர் | வரிக்கசேரி அறக்கட்டளை |
உயரம் | |
கூரை | ஒடு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | சிவப்புக் கல் |
தள எண்ணிக்கை | மூன்று |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கிருஷ்ணன் தம்புரான் |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | பிரதான கட்டிடத்தில் 74 அறைகள் |
விவரம்
தொகுவரிக்கசேரி குடும்பத்திற்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இருப்பதாகவும், இந்த குடும்பம் அஷ்ட கிருஹ (எட்டு குடும்பங்கள்) என்னும் நம்பூதிரி குடும்பங்களிடையே இறையாண்மையை வகித்ததாகவும் அறியப்படுகிறது. [1] 1902 ஆம் ஆண்டில் அல்லது சுமார் 1902 ஆம் ஆண்டில் உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிவப்புக் கல்லைப் பயன்படுத்தி வராக்காசேரி ரவி நம்பூதிரிபாட் [2] என்பவரால் இந்த மனை கட்டப்பட்டது. [3] ஒரு பிரம்மாண்டமான படிப்புரமானது (வாயில் வீடு) [4] மூன்று மாடி கட்டிட வளாகத்துக்கு முகப்பாக உள்ளது. இந்த வீடானது 74 அறைகள் கொண்ட நாலுகெட்டு வீடாகும். இரண்டு பத்தியப்புரங்கள் (வெளிமாளிகைகள்), ஒரு பெரிய குளம் மற்றும் அதை ஒட்டிய குளியல் இல்லம், சிவன், கிருஷ்ணன் மற்றும் ஐயப்பன், ஆகிய மூன்று கோயில்களைக் கொண்ட ஒரு குடும்பக் கோயில் வளாகம் உள்ளன பின்னர் இடூபுரா (சாப்பாட்டு மண்டபம்) போன்றவை இடிக்கப்பட்டன. [5] இதை வடிவமைத்தவர் வரிக்கசேரி குடும்பத்தைச் சேர்ந்த சில்பி தம்புரான் என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணன் தம்புரான் ஆவார். இவர் சென்னையில் கட்டிடக்கலை படித்தவர். மேற்கத்திய கட்டிடக்கலையின் தாக்கம் கட்டிடத்தின் வடிவமைப்பில் காணப்படுகிறது. வீட்டின் விட்டங்கள், கதவுகள், சன்னல்கள் மரத்தினால் செய்யப்பட்டவை மற்றும் இவை நுணுக்கமான செதுக்கு வேலைகளால் அலங்கரிக்கப்பட்டவையாக உள்ளன.
1987 ஆம் ஆண்டு மோகன் தயாரித்த தீர்த்தம் திரைப்படத்தில் தொடங்கி பல மலையாள படங்கள் இந்த வீட்டில் படம்பிடிக்கபட்டுள்ளன. [3] 100 க்கும் மேற்பட்ட படங்களின் முதன்மை படப்பிடிப்பு இங்கு மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கப்படுகிறது [6] இதில் தேவசுரம், ஆராம் தம்புரான், ராப்பக்கல், ஆனந்தபத்ரம், துரோணா ,, சிம்மாசனம், மாடம்பி, சூஃபி பரஞ்ச கதா, ஜனா ( தமிழ் ), தூவல் கொட்டரம், வள்ளியெட்டன், காவலன், மாந்த்ரிகன், ப்ரீதம் 2 ஆகியவை படங்கள். எந்தவொரு படம் படமாக்கப்படாதபோதும் பார்வையாளர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். [7] 25 அசல் வாரிசுகளில் 10 பேரும், மீதமுள்ள 15 வாரிசுகளிடமிருந்து உரிமைகளை வாங்கிய சில முதலீட்டாளர்களும் அடங்கிய, சொத்தின் தற்போதைய உரிமையாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையால் மனை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
1940 களில் பிரபல சிற்பியாக இருந்த வரிக்காசேரி கிருஷ்ணன் நம்பூதிரிபாட் இந்த வீட்டிற்கான மூடு முகப்பை (போர்டிகோ) கட்டினார். [8]
அமைவிடம்
தொகுஇந்த மனை தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் பாலக்காட்டில் இருந்து 35 கி.மீ தொலைவில் ஒற்றப்பாலத்தில் உள்ள மணிசேரியில் அமைந்துள்ளது. [7] அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஒற்றைபாலம் தொடருந்து நிலையம், ஆனால் ஆனால் 13 கி.மீ தூரத்தில் உள்ள ஷோறணூர் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக இதை அடையலாம். [9] கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் மனையில் இருந்து 62 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [10]
படக்காட்சியகம்
தொகு-
நுழைவு -
வரிக்கசேரி கோயில் -
நலுக்கேட்டு -
வராண்டா -
முற்றம் -
வெளி வீடு -
குடும்பக் குளம் -
குளியல் வீடு -
உள்ளே ஒரு தோற்றம் -
சிவப்பு கல் சுவர் மற்றும் ஒரு சன்னல்
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Krishnan Varikkassery. "Varikkassery Mana - a report". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ "Varikkassery Mana, where heritage wins time - MovingShoe". movingshoe.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ 3.0 3.1 Veedu (2014-07-31). "Veedu special episode at Varikkassery Mana". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ Holidays, Paradise (2017-05-08). "8 Gorgeous Movie Locations in Kerala that will Bring Out the Actor in You!". Medium. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
- ↑ "Varikkasseri Mana - the ancestral home of Malayalam cinema". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ "Most popular shooting locations for Mollywood". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ 7.0 7.1 "The stately Varikkasseri Mana beckons visitors". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
- ↑ Rajendu, S (2012). Srushtiyum visrushtiyum (സൃഷ്ടിയും വിസൃഷ്ടിയും, ശില്പി വരിക്കാശ്ശീരി കൃഷ്ണൻ നമ്പൂതിരിപ്പാടിൻറെ കലയും ജീവിതവും). Calicut: Mathrubhumi Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8265-380-1.
- ↑ White Line (2018-08-05). "Varikkassery Mana - a documentary". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
- ↑ "Ottappalam". Kerala Tourism Department. பார்க்கப்பட்ட நாள் 11 May 2016.
மேலும் படிக்க
தொகு- Krishnan Varikkassery.. "Varikkassery Mana". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
வெளி இணைப்புகள்
தொகு- Azhiyur Traveler (2014-04-07). "Kerala Tourism - Varikkassery Mana". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- Travel diaries (2018-03-21). "Varikkassery Mana - Illam - 100 years old Houses - Ashta griha". YouTube - Kerala tourism. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.