வரீந்தர் சிங் (வளைதடிப்பந்தாட்டம்)

வரீந்தர் சிங் (Varinder Singh)(16 மே 1947 - 28 ஜூன் 2022) ஒரு இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர். 1972 ஆம் ஆண்டு முனிச்சில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 1976 கோடைகால ஒலிம்பிக்கிலும் போட்டியிட்டார். அவர் அப்போதைய பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஜலந்தரில் பிறந்தார்.

வரீந்தர் சிங்
பதக்கப் பட்டியல்
ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
 இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒலிம்பிக்கு விளையாட்டுகள்
1972 முனிச் அணி
வளைதடிப் பந்தாட்ட உலகக்கோப்பை
1973 ஆம்ஸ்டர்டாம் அணி
1975 கோலாலம்பூர் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1974 டெஹ்ரான் Team
1978 பாங்காக் அணி
ஜனாதிபதி, ஸ்ரீமதி. பிரதீபா பாட்டீல் ஆகஸ்ட் 29, 2007 அன்று புதுதில்லியில் நடந்த ஒரு வண்ணமிகு விழாவில், வளைத்தடிப் பந்தாட்டத்தில் சிறப்பான பங்களிப்பிற்காக ஸ்ரீ வரீந்தர் சிங்கிற்கு தியான் சந்த் விருது -2007 ஐ வழங்கினார்.

சிங் 28 ஜூன் 2022 அன்று ஜலந்தரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது 75வது வயதில் இறந்தார் [1] .

மேற்கோள்கள் தொகு