வருண் தவான்

(வருண் தவான் (நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வருண் தவான் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தற்பொழுது மெயின் தேரா ஹீரோ மற்றும் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வருண் தவான்
'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்' திரைப்படதிற்கான பத்திரிக்கையாளர் கூடலில்- வருண் தவான்
பிறப்புஏப்ரல் 24, 1987 ( 1987 -04-24) (அகவை 37)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–அறிமுகம்
பெற்றோர்டேவிட் தவான்
கருணா தவான்
உறவினர்கள்ரோஹித் தவான் (சகோதரர்)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

வருண் தவான் 24ம் திகதி ஏப்ரல் மாதம் 1987ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை டேவிட் தவான் ஒரு திரைப்பட இயக்குநர் ஆவார். இவரின் தாயின் பெயர் கருணா தவான் மற்றும் இவரின் அண்ணன் ரோஹித் தவான் ஒரு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நாட்டிங்காம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில், இங்கிலாந்துல் வர்த்தக முகாமைத்துவம் பற்றி படித்துள்ளார்.

சினிமா வாழ்க்கை

தொகு
 
வருண் தவான் வருண் தவான் உடன் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அலீயா பட் promoting ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்.

2012ம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் இவருடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நடிகை அலீயா பட் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள மெயின் தேரா ஹீரோ என்ற திரைப்படம் 2011ம் ஆண்டு வெளியான கன்டிறீகா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இலியானா மற்றும் நர்கிஸ் பக்ரி நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஏக்தா கபூர் தயாரித்து, பாலாஜி மோடியன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏப்ரல் 4ம் திகதி வெளியிடுகின்றது.

இவர் தற்பொழுது ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார். இவருக்கு ஜோடியாக மறுபடியும் நடிகை அலீயா பட் நடிக்கின்றார்.

திரைப்படம்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2012 ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்
2014 மெயின் தேரா ஹீரோ
2014 ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா
2014 பட்லபூர் படபிடிப்பில்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
ஆண்டு படம் விருது பிரிவு முடிவு
2012 ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் விருதுகள் சிறந்த ஆண் நடிகருக்கான விருது பரிந்துரை[1]
2013 ETC பாலிவுட் வர்த்தகம் விருதுகள் Most Profitable Debut (Male) பரிந்துரை[2]
பிலிம்பேர் விருதுகள் சிறந்த ஆண் நடிகர் பரிந்துரை[3]
பாலிவுட் ஹங்காமா திரைப்பட விருதுகள் சிறந்த ஆண் நடிகர் பரிந்துரை[4]
ஸ்கிரீன் அவார்ட்ஸ் புதுமுக நடிகருக்கான திரைப்பட விருது பரிந்துரை[5]
லையன்ஸ் கோல்ட் அவார்ட்ஸ் சிறந்த ஆண் நடிகர் வெற்றி[6]
ஜீ சினி விருதுகள் சிறந்த ஆண் நடிகருக்கான விருது பரிந்துரை[7]
ஸ்டார்டஸ்ட் அவார்ட்ஸ் அதிரடியான நடிப்பிற்கான சிறந்த ஆண் நடிகர் விருது வெற்றி[8]
ஸ்டார்டஸ்ட் அவார்ட்ஸ் பரிந்துரை[9]
ஸ்டார் கில்ட் விருதுகள் சிறந்த ஆண் நடிகருக்கான விருது பரிந்துரை[10]
டைம்ஸ் ஆஃப் இந்தியா சிறந்த ஆண் நடிகருக்கான விருது பரிந்துரை[11]

குறிப்புகள்

தொகு
  1. "Big Star Awards 2012 / 2013 – Winners, Nominations". Indicine. 17 திசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2014.
  2. "Bollywood Business Awards 2012". ETC Bollywood Business. 7 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்பிரவரி 2014. Event occurs at 30:28
  3. "Varun Dhawan— Awards". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
  4. "Winners: Bollywood Hungama Surfers Choice Movie Awards 2012". பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
  5. "Nominations for 19th Annual Colors Screen Awards". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2013.
  6. "Lions Gold Awards Winners 2013". Indicine. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2013.
  7. "Zee Cine Awards 2013: Team 'Barfi!', Vidya Balan, Salman Khan bag big honours". Archived from the original on 21 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2013.
  8. "Stardust Awards 2013: list of winners". NDTV. Archived from the original on 30 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Nominations for Stardust Awards 2013". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2013.
  10. "Star Guild Awards — Nominees". Star Guild Awards. Archived from the original on 6 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "TOIFA Awards 2013 Nominations". Indicine. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_தவான்&oldid=4160485" இலிருந்து மீள்விக்கப்பட்டது