இலியானா டி 'குரூஸ் (நடிகை)

இந்திய-போர்த்துகீசிய திரைப்பட நடிகை

இலியானா டி'குரூஸ் (Ileana D'Cruz, பிறப்பு:1 நவம்பர் 1987) என்பவர் இந்திய-போர்த்துகீசிய நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் இந்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். ஆரம்பத்தில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். டி'குரூஸ் 2006 ஆம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு மொழித் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார், இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது, இத்திரைப்படம் இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது. [3]

இலியானா டி 'குருஸ்
பர்ஃபி விளம்பர வெளியீட்டு நிகழ்ச்சியில் இலியானா டி 'குருஸ் ஜூலை 2012.
பிறப்பு1 நவம்பர் 1987 (1987-11-01) (அகவை 36)[1][2]
மும்பை, மகாராஷ்டிரா,இந்தியா
இருப்பிடம்ஐதராபாத், ஆந்திர பிரதேசம்,இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2006–நிகழ்காலம்

போக்கிரி (2006), ராக்கி (2006), முன்னா (2007), ஜல்சா (2008), கிக் (2009), ஜூலாய் (2012) உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் போக்கிரி, ஜல்சா, கிக் ஆகியத் திரைப்படங்களுக்காக தெலுங்கு பிலிம்பேர் சிறந்த நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [4] இவர் தமிழ் திரைப்படத்துறையில் கேடி (2006) திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

2012 இல் அனுராக் பாசு இயக்கிய பர்ஃபி! திரைப்படம் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார், இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். [5] மெயின் தேரா ஹீரோ (2014), ருசுடோம் (2016), ரெய்டு (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் இவர் முன்னணிப் பெண்மணியாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். [6]

வாழ்க்கை

1 நவம்பர் 1987 அன்று பம்பாயில் (இப்போது மும்பை) மாகிமில் ஒரு கத்தோலிக்க தந்தைக்கும் முசுலீம் தாய்க்கும் பிறந்தார். [7] [8] [9] இவர் ஒரு இறைமறுப்பாளர். [10] இவருக்கு 10 வயதாக இருந்தபோது இவரது குடும்பம் கோவாவின் பர்ராவுக்கு குடிபெயர்ந்தது. [11]

தமிழ் படம்

2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[12]

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2006 தேவதாசு பானுமதி கடம்ராஜு தெலுங்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது - தென்
போக்கிரி சுருதி தெலுங்கு
கேடி ஆர்த்தி தமிழ்
கதற்நாக்(Khatarnak) நக்‌ஷத்திரா தெலுங்கு
ராக்கி திரிபுரா தெலுங்கு
2007 முன்னா நிதி தெலுங்கு
ஆட்டா(Aata) சத்யா தெலுங்கு
2008 ஜல்சா பாக்யமதி தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது-தெலுங்கு
பலே தொங்கலூ(Bhale Dongalu) ஜோதி தெலுங்கு
2009 கிக்(Kick) நைனா தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது-தெலுங்கு
ரேசிபோ(Rechipo) கிருஷ்ணா வேணி தெலுங்கு
சலீம் சத்யவதி தெலுங்கு
2010 உடுகா உடுகி(Huduga Hudugi) சிறப்பு தோற்றம் கன்னடம்
2011 சக்தி ஐஸ்வர்யா தெலுங்கு
நேனு நா ராக்‌ஷசி(Nenu Naa Rakshasi) மீனாட்சி,
சிராவ்யா
தெலுங்கு
2012 நண்பன் ரியா தமிழ்
ஜூலை(Julai) மது தெலுங்கு
தேவுடு சேசினா மனுசுலு(Devudu Chesina Manushulu) இலியானா தெலுங்கு
பர்ஃபி சுருதி கோஷ் / செங்குப்தா இந்தி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது-ஹிந்தி
பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது
2013 பதா போஸ்டர் நிக்லா ஹீரோ(Phata Poster Nikla Hero) இந்தி
2014 மேய்ன் தேரா ஹீரோ (Main Tera Hero) சுனைனா இந்தி
ஹேப்பி என்டிங் (Happy Ending) ஆன்ச்சல் ரெட்டி இந்தி
2015 கிக் 2 (Kick 2) நைனா தெலுங்கு சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

  1. Debut Deck: Ileana D'Cruz, Slide 2
  2. Social Post. "Ileana D Cruz - Movies, Photos, Filmography, Biography, Wallpapers, Videos, Fan Club". entertainment.oneindia.in. Archived from the original on 2012-11-25. பார்க்கப்பட்ட நாள் 2012-09-18.
  3. "Traditional Beauty Ileana D'Cruz!". India Today. 5 March 2023. Archived from the original on 27 August 2019. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  4. rediff.com: 'Acting was never my dream' பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம். Specials.rediff.com. Retrieved on 28 May 2011.
  5. "How Ileana D'Cruz has made her mark in Bollywood with Barfi!". Firstpost (in ஆங்கிலம்). 19 September 2012. Archived from the original on 15 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  6. "Ileana D'Cruz: The idea of dropping the jacket in Baadshaho was mine". Coleman & Co. Ltd. 27 September 2013. Archived from the original on 21 June 2014. பார்க்கப்பட்ட நாள் 21 June 2014.
  7. "Happy Birthday Ileana D'Cruz: Barfi to Raid, 5 MUST watch movies of the actress". Zee News. 21 December 2012. Archived from the original on 1 November 2022. பார்க்கப்பட்ட நாள் 1 November 2022.
  8. "Ileana D'Cruz turns 30: Let the birthday girl and her beau Andrew Kneebone give you relationship goals". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 11 August 2020.
  9. Gupta, Priya (27 September 2013). "No one can contain me: Ileana D'Cruz". The Times of India. Bennett, Coleman & Co. Ltd. Archived from the original on 21 June 2014. பார்க்கப்பட்ட நாள் 21 June 2014.
  10. "'Rustom' actress Ileana D'Cruz confesses of being an atheist". India TV. 3 August 2016. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  11. "Bollywood Calling Ileana D'Cruz!". Archived from the original on 17 December 2013. பார்க்கப்பட்ட நாள் 16 December 2013.
  12. "Will Vijay's Nanban touch the Rs. 100 Crore mark?". Sify.com. 21 January 2012. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.

வெளி இணைப்புகள்