வரைவு:சையிது முகம்மது அலி சிகாபு தங்ஙள்

(வரைவு:சையத் முஹம்மதலி ஷிஹாப் தங்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முகம்மதலி சிகாப் தங்ஙள்
(Syed Muhammedali Shihab Thangal)
சூலை 2008-ல் முகமதிலி சிகாப் தங்ஙள்
பிறப்பு(1936-05-04)4 மே 1936
மலப்புறம், மலபார் மாவட்டம், இந்தியா
இறப்பு1 ஆகத்து 2009(2009-08-01) (அகவை 73)
மலப்புரம், கேரளா (இந்தியா)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அல்-அசார் பல்கலைக்கழகம்
கெய்ரோ பல்கலைக்கழகம்
பணி
  • சமூகத் தலைவர்
  • இஸ்லாமிய அறிஞர்
  • அரசியல்வாதி[1]
பெற்றோர்பி. எம். எஸ். ஏ. பூக்கோயா தங்ஙள் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
  • சரீபா பாத்திமா பீவி (இறப்பு 2006)
  • ஆயிசா பீவி (திருமணம் 2006)
பிள்ளைகள்
  • அலி சிகாப் தங்ஙள்
  • பஷீர் அலி சிகாப் தங்ஙள்
உறவினர்கள்
  • உமரலி சிகாப் தங்ஙள் (சகோதரர்)
  • சையத் ஹைதரலி சிகாப் தங்ஙள்(சகோதரர்)
  • சையத் சாதிக் அலி சிகாப் தங்ஙள் (சகோதரர்)
  • சையத் அப்பாசு அலி சிகாப் தங்ஙள் (சகோதரர்)

முகம்மதலி சிகாப் தங்ஙள் (Syed Muhammedali Shihab Thangal, 4 மே 1936 - 1 ஆகத்து 2009), என்பவர் இந்தியச் சமூகத் தலைவரும், இஸ்லாமிய அறிஞரும், கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார்.[2] [3] இவர் நவீன கேரளாவின் மிக முக்கியமான "மாப்பிளமார் தலைவர்" என்றும் கருதப்படுகிறார்.[4] சிகாப் தங்ஙள் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் (1975 - 2009) கேரள மாநிலக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.[5] [2] இவர் யெமன் வம்சாவளியைச் சேர்ந்த தங்ஙள் என்ற கேரளாவில் உள்ள ஓர் இசுலாமியச் சமூகத்தில் பிறந்தார்.[6] இவர் கேரள மாநில இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1975 முதல் 2009 வரை செயல்பட்டார்.

இளமை மற்றும் கல்வி

தொகு

மே 4, 1936 அன்று பி. எம். எஸ். ஏ. புக்கோயா தங்ஙளில் மூத்த மகனாகப் பிறந்தார்.[7] [8] இவருடன் உடன்பிறந்தவர்கள் உமேரலி சிகாப் தங்ஙள், கைதரலி சிகாப் தங்ஙள், சாதிக் அலி சிகாப் தங்ஙள் மற்றும் அப்பாசாலி சிகாப் தங்ஙள்.[9] இவர் தனது ஆரம்பக் கல்வியை பானக்காட்டில் உள்ள பள்ளியிலும், தனது உயர்நிலைக்கல்வியை கோழிக்கோட்டில் உள்ள எம். எம். உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.[10][8] இவர் தனது ஆரம்ப இசுலாமியக் கல்வியை திரூர் மற்றும் மல்லபுரத்திலுள்ள கானஞ்சேரியிலும் பாரம்பரிய மதராசாக்களிலும் கற்றார்.[8] [11]

வெளிநாட்டில் உயர் கல்வி

தொகு

1958-ல் சிகாப் தங்ஙள் மேலதிக படிப்பை படிப்பதற்காக எகிப்துக்குச் சென்று 1961-ல் அல்-அசார் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[11] இவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்து 1966இல் அரபு இலக்கியம் மற்றும் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[11][12]

தங்ஙள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நன்கு புலமை பெற்றவர்.[12] இவர் சூபி-கவிதைகள் மீதான ஆர்வத்திற்காகவும் அறியப்பட்டார்.[13] கேரளாவுக்குத் திரும்பிய பின்பு சையத் பாபாக்கி தங்ஙளின் மகளான சரீபா பாத்திமா பீவியை மணந்தார்.[10]

பொது வாழ்க்கை

தொகு

1975-ல் இவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு கேரள மாநிலக் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் குழுவின் தலைவரானார்.[14] [15] 1992-ல் பாபர் மசூதி இடிப்பு போன்ற மிகவும் பதட்டமான காலங்களில் கேரளாவில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார்.[2] [12]

 
2010ஆம் ஆண்டின் இந்திய தபால் தலையில் முகமதிலி சகாப் தங்ஙள்

சிகாப் தங்ஙள் 1 ஆகத்து 2009 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Misiriya, P. V. Nafeesathul (2013). "Review of the Economic and Educational Status of the Muslim Community in Kerala" (PDF). In Rajan, K. (ed.). Emigration and Educational Development of Muslim Community in Kerala. Kottayam: Mahatma Gandhi University. p. 17. hdl:10603/19658.
  2. 2.0 2.1 2.2 "ஐயூஎம்எல் தலைவர் தங்கல் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா அஞ்சலி". www.timesofindia.indiatimes.com. 02-10-2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "IUML Leader Shihab Thangal Dead". 
  4. Miller, Roland E. (2015). Mappila Muslim Culture. State University of New York Press. pp. 103, 240–42.
  5. "Syed Families Hold Get-together". The Hindu. 1 May 2006. http://www.hindu.com/2006/05/01/stories/2006050100420200.htm. பார்த்த நாள்: 2 August 2009. 
  6. Miller, Roland E., Mappila Muslim Culture.
  7. Usman, M. (2005). "IV" (PDF). In Prakash, B. Alwin (ed.). The Role of Voluntary Agencies in Human Resource Development: A Case Study of Orphanages in Malappuram District. University of Calicut. p. 112.
  8. 8.0 8.1 8.2 "IUML Leader Shihab Thangal Dead". 
  9. "IUML Leader Panakkad Sayyid Hyder Ali Shihab Thangal Laid to Rest". https://www.onmanorama.com/news/kerala/2022/03/06/iuml-state-president-panakkad-sayed-hyderali-thangal-dies.html. 
  10. 10.0 10.1 Miller, Roland E. (2015). Mappila Muslim Culture. State University of New York Press. pp. 103, 240–42.
  11. 11.0 11.1 11.2 11.3 Indo-Asian News Service (12 August 2009). "Kerala Bids Farewell to Panakkad Shihab Thangal". MSN. Archived from the original on 12 March 2012.
  12. 12.0 12.1 12.2 "I. U. M. L. Chief Panakkad Thangal Dead". The New Indian Express. 1 August 2009. https://www.newindianexpress.com/states/kerala/2009/aug/01/iuml-chief-panakkad-thangal-dead-73869.html. 
  13. Radhakrishnan, M. G . (27 August 2012). "Kerala in a League of its Own". India Today. https://www.indiatoday.in/magazine/nation/story/20120827-growing-clout-of-muslim-league-udf-mobilisation-of-hindu-christian-groups-759456-2012-08-17. 
  14. M. Rahim. Changing Identity and Politics of Muslims in Malappuram District Kerala (PDF). Keral University-Shodhganga. p. 79. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.
  15. <ref> இவர் இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார்.<ref name=":1">Miller. Mappila Muslim Culture. State University of New York Press.