வரைவு:சையிது முகம்மது அலி சிகாபு தங்ஙள்
முகம்மதலி சிகாப் தங்ஙள் (Syed Muhammedali Shihab Thangal) | |
---|---|
சூலை 2008-ல் முகமதிலி சிகாப் தங்ஙள் | |
பிறப்பு | மலப்புறம், மலபார் மாவட்டம், இந்தியா | 4 மே 1936
இறப்பு | 1 ஆகத்து 2009 மலப்புரம், கேரளா (இந்தியா) | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அல்-அசார் பல்கலைக்கழகம் கெய்ரோ பல்கலைக்கழகம் |
பணி |
|
பெற்றோர் | பி. எம். எஸ். ஏ. பூக்கோயா தங்ஙள் (தந்தை) |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
முகம்மதலி சிகாப் தங்ஙள் (Syed Muhammedali Shihab Thangal, 4 மே 1936 - 1 ஆகத்து 2009), என்பவர் இந்தியச் சமூகத் தலைவரும், இஸ்லாமிய அறிஞரும், கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார்.[2] [3] இவர் நவீன கேரளாவின் மிக முக்கியமான "மாப்பிளமார் தலைவர்" என்றும் கருதப்படுகிறார்.[4] சிகாப் தங்ஙள் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் (1975 - 2009) கேரள மாநிலக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.[5] [2] இவர் யெமன் வம்சாவளியைச் சேர்ந்த தங்ஙள் என்ற கேரளாவில் உள்ள ஓர் இசுலாமியச் சமூகத்தில் பிறந்தார்.[6] இவர் கேரள மாநில இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1975 முதல் 2009 வரை செயல்பட்டார்.
இளமை மற்றும் கல்வி
தொகுமே 4, 1936 அன்று பி. எம். எஸ். ஏ. புக்கோயா தங்ஙளில் மூத்த மகனாகப் பிறந்தார்.[7] [8] இவருடன் உடன்பிறந்தவர்கள் உமேரலி சிகாப் தங்ஙள், கைதரலி சிகாப் தங்ஙள், சாதிக் அலி சிகாப் தங்ஙள் மற்றும் அப்பாசாலி சிகாப் தங்ஙள்.[9] இவர் தனது ஆரம்பக் கல்வியை பானக்காட்டில் உள்ள பள்ளியிலும், தனது உயர்நிலைக்கல்வியை கோழிக்கோட்டில் உள்ள எம். எம். உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.[10][8] இவர் தனது ஆரம்ப இசுலாமியக் கல்வியை திரூர் மற்றும் மல்லபுரத்திலுள்ள கானஞ்சேரியிலும் பாரம்பரிய மதராசாக்களிலும் கற்றார்.[8] [11]
வெளிநாட்டில் உயர் கல்வி
தொகு1958-ல் சிகாப் தங்ஙள் மேலதிக படிப்பை படிப்பதற்காக எகிப்துக்குச் சென்று 1961-ல் அல்-அசார் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[11] இவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்து 1966இல் அரபு இலக்கியம் மற்றும் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[11][12]
தங்ஙள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நன்கு புலமை பெற்றவர்.[12] இவர் சூபி-கவிதைகள் மீதான ஆர்வத்திற்காகவும் அறியப்பட்டார்.[13] கேரளாவுக்குத் திரும்பிய பின்பு சையத் பாபாக்கி தங்ஙளின் மகளான சரீபா பாத்திமா பீவியை மணந்தார்.[10]
பொது வாழ்க்கை
தொகு1975-ல் இவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு கேரள மாநிலக் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் குழுவின் தலைவரானார்.[14] [15] 1992-ல் பாபர் மசூதி இடிப்பு போன்ற மிகவும் பதட்டமான காலங்களில் கேரளாவில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார்.[2] [12]
சிகாப் தங்ஙள் 1 ஆகத்து 2009 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Misiriya, P. V. Nafeesathul (2013). "Review of the Economic and Educational Status of the Muslim Community in Kerala" (PDF). In Rajan, K. (ed.). Emigration and Educational Development of Muslim Community in Kerala. Kottayam: Mahatma Gandhi University. p. 17. hdl:10603/19658.
- ↑ 2.0 2.1 2.2 "ஐயூஎம்எல் தலைவர் தங்கல் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா அஞ்சலி". www.timesofindia.indiatimes.com. 02-10-2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "IUML Leader Shihab Thangal Dead".
- ↑ Miller, Roland E. (2015). Mappila Muslim Culture. State University of New York Press. pp. 103, 240–42.
- ↑ "Syed Families Hold Get-together". The Hindu. 1 May 2006. http://www.hindu.com/2006/05/01/stories/2006050100420200.htm. பார்த்த நாள்: 2 August 2009.
- ↑ Miller, Roland E., Mappila Muslim Culture.
- ↑ Usman, M. (2005). "IV" (PDF). In Prakash, B. Alwin (ed.). The Role of Voluntary Agencies in Human Resource Development: A Case Study of Orphanages in Malappuram District. University of Calicut. p. 112.
- ↑ 8.0 8.1 8.2 "IUML Leader Shihab Thangal Dead".
- ↑ "IUML Leader Panakkad Sayyid Hyder Ali Shihab Thangal Laid to Rest". https://www.onmanorama.com/news/kerala/2022/03/06/iuml-state-president-panakkad-sayed-hyderali-thangal-dies.html.
- ↑ 10.0 10.1 Miller, Roland E. (2015). Mappila Muslim Culture. State University of New York Press. pp. 103, 240–42.
- ↑ 11.0 11.1 11.2 11.3 Indo-Asian News Service (12 August 2009). "Kerala Bids Farewell to Panakkad Shihab Thangal". MSN. Archived from the original on 12 March 2012.
- ↑ 12.0 12.1 12.2 "I. U. M. L. Chief Panakkad Thangal Dead". The New Indian Express. 1 August 2009. https://www.newindianexpress.com/states/kerala/2009/aug/01/iuml-chief-panakkad-thangal-dead-73869.html.
- ↑ Radhakrishnan, M. G . (27 August 2012). "Kerala in a League of its Own". India Today. https://www.indiatoday.in/magazine/nation/story/20120827-growing-clout-of-muslim-league-udf-mobilisation-of-hindu-christian-groups-759456-2012-08-17.
- ↑ M. Rahim. Changing Identity and Politics of Muslims in Malappuram District Kerala (PDF). Keral University-Shodhganga. p. 79. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.
- ↑ <ref> இவர் இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார்.<ref name=":1">Miller. Mappila Muslim Culture. State University of New York Press.