வர்ணச் சுண்டங்கோழி

பறவை இனம்
வர்ணச் சுண்டங்கோழி
ரண்தம்போர் தேசியப் பூங்காவில் ஒரு தனிப்பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. lunulata
இருசொற் பெயரீடு
Galloperdix lunulata
(Valenciennes, 1825)
வேறு பெயர்கள்

Francolinus hardwickii

வர்ணச் சுண்டங்கோழி (Painted Spurfowl), பாறைப்பகுதிகளிலும் சமதள நிலப்பகுதிகளிலும் காணப்படும் ஒரு பறவையாகும். இதன் குடும்ப பெயர் பெசென்சு (pheasant) என்பதாகும். இவை தீபகற்ப இந்தியாவில் பாறை மலைகள் மற்றும் புதர்க்காடுகளில் காணப்படுகிறது. இவற்றின் ஆண் இனம் பல நிறத்துடன் பிரகாச வெள்ளை நிறம் கொண்டு காணப்படுகிறது. இப்பறவையில் ஆண் பறவையின் கால்பகுதியில் நான்கு குதிமுட்களும் பெண் பறவையின் கால்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு குதிட்களும் கொண்டு காணப்படுகிறது. இப்பறவைகள் சுண்டங்கோழிகளைப் போலல்லாமல் பாறைகள் மற்றும் புதர்க்காடுகளின் வாழ்விடங்களில் முக்கியமாகக் காணப்படுகின்றன. புதர்களுக்கடியில் இரண்டு அல்லது அதற்கும் மேலும் கூட்டமாக காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

வர்ணச் சுண்டங்கோழிகள் கௌதாரியின் அளவு இருக்கும். இவற்றின் அலகு கறுப்பு நிறத்திலும், விழிப்படலம் செம்மை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் கொம்பு நிறமான பழுப்பு நிறத்தில் இருக்கும். சாம்பல் நிறத்தில் உடல் கொண்டிருந்தாலும் பல வர்ணம் கொண்டதாக காணப்படுகிறது. இவற்றின் வால்பகுதி சில நேரங்களில் மேல் நோக்கி காணப்படுகிறது.[2][3][4]

ஆண்பறவையின் நெற்றியும், உச்சந்தலையும் கரும் பச்சை நிறங்கலந்து கருப்பாக வெண்மை நிறத்திலான சிறு புள்ளிகள் நிறைந்து காணப்படும். தலைப் பக்கங்களிலும் கழுத்திலும் கறுப்பு நிறத்திற்கிடையே பெரிய வெள்ளைப் புள்ளிகளைக் காண இயலும். உடலின் மேற்பகுதி செம்பழுப்பாக இருக்கும். கறுப்பு கரையோடு கூடிய கண் போன்ற வெண்புள்ளிகள் அந்த செம்பழுபினிடையே அழகாக இருக்கும். வால் பசுமை கலந்த கறுப்பாக இருக்கும். முதுகின் பின் பகுதியில் புள்ளிகள் காணப்படுவதில்லை.

பெண் பறவைகளின் தலை செம்பழுப்பாகவும், உடலின் மேற்பகுதி ஆலிவ் சிறம் கலந்த கரும்பழுப்பாக இருக்கும். தொண்டை, கண்ணம் ஆகியன மங்கிய மஞ்சள் நிறமாக இருக்கும். இடையிடையே செம்பழுப்பு புள்ளிகள் காணப்படும். மார்பும் வயிறும் ஆலிவ் நிறம் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.

பரவலும் வாழிடமும்

தொகு

வர்ணச் சுண்டங்கோழிகள் இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரின் சில பகுதிகளிலும்,[5][6][7][8] மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியான பச்மர்கி (Pachmarhi[9]) மற்றும் தென்னிந்தியாவின் பாறை மலைகள் மற்றும் வறண்ட காடுகளிலும் காணப்படுகிறது. ஆந்திரப்பிரதேசத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நல்லமலா பகுதியிலும் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.[10] தென்னிந்தியாவின் சில பகுதிகளில், இவை பாறை மலைகளில் புதர்ச் சரிவுகளுடன் காணப்படுகின்றன.[11][12]

நடத்தையும் சூழலியலும்

தொகு
 
இந்தியாவின், தரோஜி ஸ்லாத் கரடி சரணாலயத்தில், வர்ணச் சுண்டங்கோழி
 
ஆணும் பெட்டையும்

வர்ணச் சுண்டங்கோழிகள் ஜோடிகளாக அல்லது 6 பறவைகள் வரையிலான சிறிய கூட்டமாகவே காணப்படுகின்றன. இவை தரையிலேயே இருக்கும், அரிதாகவே பறக்கும். இவை விதைகள், முளைகள், இலந்தை, லாண்டானா, அத்தி போன்ற பழங்கள், புழு பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. மேலும் இவை அதிகாலையில் நீர் நிலைகளுக்குச் செல்கின்றன. இனப்பெருக்க காலம் சனவரி முதல் சூன் வரை (முக்கியமாக பிப்ரவரி, ஆனால் ஆகத்து மாதத்தில், மழைக்குப் பிறகு, இராசத்தானின் சில பகுதிகளில் குஞ்சுகள் காணப்படுகின்றன[5]). இவை கூடுகளை பாறாங்கல் அடியில் அல்லது மூங்கில் புதர்களிடையே தரையில் குழியில் புல்லால் மெத்தென ஆக்கி மூன்று முதல் நான்குவரை அரிதாக ஐந்து முட்டைகளை இடும். முட்டைகள் இலேசான வெளிர் நிறத்தில் இருக்கும். பெண் மட்டுமே அடைகாக்கும், ஆனால் பெற்றோர்கள் இருவரும் குஞ்சுகளை கவனித்துக்கொள்கிறன. வேட்டையாடிகளிடமிருந்து குஞ்சுகளைக் காக்க இவை கவனச்சிதறல் செயல்களைச் செய்கின்றன.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Galloperdix lunulata". IUCN Red List of Threatened Species 2016: e.T22679134A92803814. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22679134A92803814.en. https://www.iucnredlist.org/species/22679134/92803814. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. pp. 128–129. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  3. Blanford WT (1898). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 4. Taylor and Francis, London. pp. 106–108.
  4. Baker, ECS (1920). "The game birds of India, Burma and Ceylon. Part 29". J. Bombay Nat. Hist. Soc. 27 (1): 1–24. https://archive.org/stream/journalofbombayn27192022bomb#page/11/mode/1up. 
  5. 5.0 5.1 Sankar, K (1993). "Painted Spurfowl Galloperdix lunulata (Valenciennes) in Sariska Tiger Reserve, Rajasthan". J. Bombay Nat. Hist. Soc. 90 (2): 289. https://biodiversitylibrary.org/page/48609544. 
  6. Reddy, GV (1994). "Painted Spurfowl in Sariska". Newsletter for Birdwatchers 34 (2): 38. https://archive.org/stream/NLBW34_2#page/n19/mode/1up. 
  7. Kumar, Shantanu (1996). "Record of the Painted Spurfowl, Galloperdix lunulata (Valenciennes) in Ramgarh Sanctuary of District Bundi, Rajasthan". J. Bombay Nat. Hist. Soc. 93 (1): 89. https://biodiversitylibrary.org/page/48603337. 
  8. Sharma, Ashok Kumar (1996). "Painted Spurfowl, Galloperdix lunulata (Valenciennes) in Rajasthan". J. Bombay Nat. Hist. Soc. 93 (1): 90. https://biodiversitylibrary.org/page/48603338. 
  9. Ranjitsinh, MK (1999). "The Painted Spurfowl Galloperdix lunulata Valenciennes in Ranthambhore National Park, Rajasthan". J. Bombay Nat. Hist. Soc. 96 (2): 314. https://biodiversitylibrary.org/page/48582993. 
  10. Morgan, RW (1874). "To the Editor". Stray Feathers 2 (6): 531–532. https://archive.org/stream/strayfeathersjou21874hume#page/530/mode/1up. 
  11. Prasad, JN; Karthikeyan, S; Srinivasa, TS; Subramanya, S; Shyamal, L (1992). "Distribution of Painted Spurfowl in Karnataka". Newsletter for Birdwatchers 32 (7&8): 11–12. https://archive.org/stream/NLBW32_78#page/n12/mode/1up. 
  12. Sharma, AK (1981). "Distribution of some birds in Rajasthan". Newsletter for Birdwatchers 21 (12): 7–8. https://archive.org/stream/NLBW21#page/n151/mode/1up. 
  13. Ali, S. & Ripley, S.D. (1980). Handbook of the Birds of India and Pakistan. Volume 2 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 70–71.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணச்_சுண்டங்கோழி&oldid=3763569" இலிருந்து மீள்விக்கப்பட்டது