சுண்டங்கோழி
சிவப்பு சுண்டங்கோழி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
துணைக்குடும்பம்: | பெர்டிசினே
|
பேரினம்: | |
இனம்: | கே. பாடிசியே
|
இருசொற் பெயரீடு | |
கேலோபெர்டிக்சு பாடிசியே (ஜெமிலின், 1789) |
சிவப்பு சுண்டங்கோழி (Red Spurfowl), இந்திய நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அகணிய உயிரி இனப் பறவையாகும். இதன் குடும்பப்பெயர் பாசியானிடே என்று அறியப்படுகிறது. இப்பறவை உடல் அளவில் சிறியதாகவும் யாருக்கும் தெரியாமல் புதர்களுக்குள் மறைந்து வாழும் குணம் கொண்டுள்ளது. இவற்றின் உடல் சிகப்பு நிறத்துடன், வால்பகுதி நீட்டமாகவும் காணப்படுகிறது. இவற்றின் கண்களைச்சுற்றி சிவப்பு வண்ணம் பூசியதுபோல் தோல் தோர்த்திக் காணப்படுகிறது. இவற்றில் ஆண், பெண் இரண்டிற்குமே இவற்றின் கால்பகுதியில் ஆணி போன்ற அமைப்புடன் கூர்மையான முளை காணப்படுகிறது.
வகைபாடு
தொகுஇதில் மூன்று கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
- G. s. spadicea (Gmelin, JF, 1789) – மேற்கு நேபாளம் மற்றும் வடக்கு, நடு இந்தியா
- G. s. caurina பிளான்ஃபோர்ட், 1898 – தெற்கு இராசத்தான் (மேற்கு இந்தியா)
- திருவாங்கூர் சுண்டங்கோழி (G. s. stewarti) பேங்கர், இசிஎஸ், 1919 – நடு, தென் கேரளம் (தென்னிந்தியா)
விளக்கம்
தொகுஇது கௌதாரியை விட சற்று பெரியது ஆகும். நன்கு வளர்ந்த வீட்டுக் கோழியில் முக்கால் பங்கு இருக்கும். சுமார் 36 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். விழிபடலம் பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் பவளச் சிவப்பாக இருக்கும். தூவிகளற்ற முகத்தின் முன் பகுதியும் இளஞ்சிவப்பாக இருக்கும்.
ஆண் பறவைகளின் உச்சந்தலை கரும்பழுப்பாக இருக்கும். முகமும் கழுத்தும் சற்று வெளிரான கரும்பழுப்பாக இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்பு தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுப்பும் சிவப்புமான சிறு கோடுகள் உடல் முழுவதும் காணப்படும். சாம்பற் பழுப்பு நிற நெளி கோடுகள் இடையிடையே அழகாக காணப்படும். கால்களில் இரண்டு முதல் நான்கு வரையிலான முள் முளைகள் இருக்கும்.
பெண் பறவைகளின் நெற்றி மணற் பழுப்பாகவும், உச்சியும் பின் கழுத்தும் கரும் பழுப்பாகவும் இருக்கும். உடலின் மேற் பகுதி கருஞ்சிவப்பு கலந்த மணல் நிறமாக இருக்கும். அதனிடையிடையே அழகான சிறு கருங்கோடுகள் காணப்படும். மோவாயும் தொண்டையும் வெண்மை நிறமாக இருக்கும். மார்பும் பக்கங்களும் மங்கிய கருஞ்சிவப்பு நிறமாக நல்ல கரும்புள்ளிகளுடன் காணப்படும். இதன் கால்களில் ஓரிரு முளைகள் காணலாம்.
பரவலும் வாழிடமும்
தொகுஇந்த இனம் பெரும்பாலும் மலைப்பாங்கான புதர், வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இவை இந்தியா முழுவதும் கங்கைக்கு தெற்கே காணப்படுகின்றன. ஆக்கிரமிப்பு தாவரமான உண்ணிச்செடி உட்பட அடர்ந்த புதர்கள் உள்ள பகுதிகளை இவை விரும்புகிறன.[3]
நடத்தை
தொகுசுண்டங்கோழிகள் மூன்று முதல் ஐந்து வரையிலான சிறு கூட்டமாகப் புதற்களிடையே மறைந்து திரியும் இயல்புடையது. சுற்றி நடக்கும்போது, சில சமயங்களில் வாலை வீட்டுக் கோழிகளைப் போல செங்குத்தாக வைத்துக்கொள்ளும். இப்பறவை பகலில் அமைதியாக புதர்களுக்குள் மறைந்திருந்தாலும் காலை, மாலை சத்தமாக ஒலி கொடுக்கும் குணம் கொண்டுள்ளது. இவை விழுந்த விதைகள், பழங்கள், மெல்லுடலிகள், பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. இவற்றிற்கு மற்ற பறவையைப்போல் சிறகுகள் இருந்தாலும் குறைந்த தூரமே பறக்கும் சக்திகொண்டது. இதன் காரணமாக ஆண்டு முழுவதுமே ஒரே பிரதேசங்களில் மட்டுமே வாழுகிறது.[4]
வீட்டுக் கோழி முட்டையிட்டவுடன் கத்துவதுபோல 'கொக் கொக் கொக்' என கத்தும். மழைக்காலத்திற்கு முன்னர் சனவரி முதல் சூன் மாதத்திற்குள் இனப்பெருக்கம் செய்கிறது. மூங்கில் புதர்களிடையே தரையில் சிறு குழியில் காய்ந்த புல்லைக் கொண்டு மெத்தென்று ஆக்கி மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகிறது. ஆண் பறவை இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உடனிருக்கும். பெண் பறவை மட்டுமே அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கிறது.[4] குஞ்சுகளுடன் பெண் பறவைகள் இருக்கும் போது, ஆண் பறவைகள் வேட்டையாடிகளின் கவனத்தை திசை திருப்புவதை அவதானிக்க முடிந்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Galloperdix spadicea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Pheasants, partridges, francolins". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ Ali, S & SD Ripley (1980). Handbook of the birds of India and Pakistan. Volume 2 (2nd ed.). Oxford University Press. pp. 66–69.
- ↑ 4.0 4.1 Tehsin, Raza H (1986). "Red Spurfowl (Galloperdix spadicea caurina)". J. Bombay Nat. Hist. Soc. 83 (3): 663.
- ↑ Tehsin, Raza H (1986). "Red Spurfowl (Galloperdix spadicea caurina)". J. Bombay Nat. Hist. Soc. 83 (3): 663. https://www.biodiversitylibrary.org/page/48772067.
வெளி இணைப்புகள்
தொகு