வர்தா புயல்

அதி தீவிர வர்தா புயலானது வடக்கு இந்தியப் பெருங்கடலின் மேலாக 2016ல் நிகழ்ந்த ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். திசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையைக் கடந்த இப்புயலானது, திசம்பர் 13 ஆம் தேதி கர்நாடக மாநில நிலப் பரப்பைத் தாண்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது.[1][2]. இது 2016 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிகழும் நான்காவது புயலாகும்.

அதி தீவிரப் புயல் வர்தா
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
உச்சபட்ச பலத்துடன் 11 டிசம்பர் அன்று வர்தா
தொடக்கம்6 திசம்பர் 2016
மறைவு13 திசம்பர் 2016
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph)
1-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph)
தாழ் அமுக்கம்982 hPa (பார்); 29 inHg
இறப்புகள்மொத்தம் 38
சேதம்$2 பில்லியன் (2016 US$)
பாதிப்புப் பகுதிகள்தாய்லாந்து, சுமத்ரா, மலேசியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தென்னிந்தியா
2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

திசம்பர் 3ஆம் தேதி மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, திசம்பர் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. தொடர்ந்து அடுத்த நாள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய இது, திசம்பர் 8ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாண்டி புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த இப்புயலானது திசம்பர் 9ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. 11 திசம்பர் அன்று அதி தீவிர புயலாக மாறும் முன் காற்றின் வேகம் 130 km/h (81 mph) ஆகவும், மத்திய அழுத்தம் 982 hPa (29.0 inHg) ஆகவும் இருந்தது. தீவிர புயலாக வலுவிழந்த இப்புயலானது சென்னைக்கு அருகே திசம்பர் 12 ஆம் தேதி கரையைக் கடந்தது.

இப்புயலுக்கு சிவப்பு ரோஜா எனப் பொருள்படும் வர்தா என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டது.[3]

புயலின் வழித்தடம்

தொகு
  • 12 டிசம்பர் அன்று மாலையில் மிதமான மழைப்பொழிவு ஆரம்பித்து, இரவு தீவிரமாகும் என கணிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு நடுவம் அறிவித்தது.[4]
  • வர்தா புயல் டிசம்பர் 12 அன்று பிற்பகலில் சென்னைக்கருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை நடுவம் தெரிவித்தது. அப்போது மணிக்கு 80 - 90 கி.மீ. எனும் வேகத்துடன் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று காலையில் தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து, மறுநாள் வரை நீடிக்கும் என சென்னையிலுள்ள வட்டார புயல் எச்சரிக்கை நடுவம் அறிவித்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இவ்விதமாக மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.[5]
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 12 அன்றைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • சென்னையில் டிசம்பர் 11 அன்று இரவில் தொடங்கிய மழை, டிசம்பர் 12 அன்று காலை 8.30 மணிவரை 58 மில்லி மீட்டர் எனும் அளவாக பதிவாகியது.
  • சென்னையில் தொடர்ந்து மழை பெய்ததால், மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.[6]
  • சென்னையில் புறநகர் தொடருந்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "'வர்தா' புயலின் மையப் பகுதி சென்னையைக் கடந்தது". Retrieved 13 திசம்பர் 2016.
  2. "கோவாவை 14-ஆம் தேதி கடக்கிறது "வர்தா' புயல்". Retrieved 13 திசம்பர் 2016.
  3. Sanyal, Anindita. "Name Of Cyclone 'Vardah' Given By Pakistan, Means A 'Red Rose'". NDTV. http://www.ndtv.com/india-news/name-of-cyclone-vardah-given-by-pakistan-1636792. பார்த்த நாள்: 12 December 2016. 
  4. "சென்னையை நெருங்கிறது 'வர்தா' புயல்: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை". தினமணி. 11 டிசம்பர் 2016. Retrieved 11 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Cyclone Vardah heads towards Chennai shores". தி இந்து. 12 டிசம்பர் 2016. Retrieved 12 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "Cyclone Vardah: Air services affected in Chennai". தி இந்து. 12 டிசம்பர் 2016. Retrieved 12 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "Suburban train services suspended in Chennai". தி இந்து. 12 டிசம்பர் 2016. Retrieved 12 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தா_புயல்&oldid=3868665" இலிருந்து மீள்விக்கப்பட்டது