2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்


இந்தியாவில் 2016 ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் 30 அன்று தொடங்கியது.

இம்முறை சற்று தாமதமாக ஆரம்பித்தாலும், இயல்பான மழையளவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நடுவம் அறிவித்தது.[1][2] எனினும் நவம்பர் 30 வரை குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை.[3]

மழையளவில் பற்றாக்குறை

தொகு
  • வங்காள விரிகுடாக் கடலில் உருவான நாடா எனும் புயலின் காரணமாக பெய்த மழையால், தமிழ்நாடு மாநில மழையளவுப் பற்றாக்குறை 71% என்பதிலிருந்து 68% என்றானது.[4]
  • அடுத்து உருவான வர்தா புயலினால் ஏற்பட்ட மழைப்பொழிவினை அடுத்து, தமிழ்நாடு மாநில மழையளவுப் பற்றாக்குறை 61% என்றானது (டிசம்பர் 13 அன்று காலை 8.30 மணி நிலவரப்படி)[5].

உருவான புயல்கள்

தொகு

இந்தப் பருவமழைக் காலத்தில், இரண்டு புயல் சின்னங்கள் வங்காள விரிகுடாக் கடலில் உருவாகின.

நாடா புயல்

தொகு
 
வங்காள விரிகுடா கடலில் காணப்பட்ட நாடா புயல் சின்னம் (30 நவம்பர் 2016, இந்திய நேரம் இரவு 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒளிப்படம்)

வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை, கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யும் என சென்னை வட்டார புயல் எச்சரிக்கை நடுவம் அறிவித்தது.[6][7] இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் கவனிப்புப் படைகள் அனுப்பப்பட்டன.

மாநிலத்திற்கு நல்ல மழைப்பொழிவினை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நாடா புயல், குறிப்பிடத்தக்களவில் மழையைக் கொண்டுவரவில்லை.

வர்தா புயல்

தொகு
  • சென்னையில் டிசம்பர் 11 அன்று இரவில் தொடங்கிய மழை, டிசம்பர் 12 அன்று காலை 8.30 மணிவரை 5.8 சென்டிமீட்டர் எனும் அளவாக பதிவாகியது.
  • டிசம்பர் 12 அன்று காலை 8.30 மணி முதல் டிசம்பர் 13 அன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் சென்னை, அதனைச் சார்ந்த பகுதிகளில் பதிவான மழையளவுகள்[8]:
    • சத்யபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 38 சென்டிமீட்டர்
    • காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 34 சென்டிமீட்டர்
    • மீனம்பாக்கம் - 20 சென்டிமீட்டர்
    • நுங்கம்பாக்கம் - 12 சென்டிமீட்டர்
  • புயலின்போது பெய்த மழையால் வேலூர் மாவட்டத்து நீர்நிலைகளில் நீர் கொள்ளளவு அதிகரித்தது. ஆற்காடு, நெமிலி ஆகிய இடங்களிலுள்ள 3 பெருங்குளங்கள் நிரம்பின.[9]

மாவட்டவாரியாக மழையளவுகள்

தொகு

அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 3 மாதங்களுக்கு பெய்யும் வடகிழக்குப் பருவ மழை, இவ்வாண்டில் நவம்பர் இறுதிநாள் வரை மிகக் குறைந்தளவே பெய்திருந்தது.

வரிசை எண் மாவட்டம் இயல்பான மழையளவு (மில்லி மீட்டர்) 1 அக்டோபர் முதல் 30 நவம்பர் வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டர்)[10] % வேறுபாடு
1 அரியலூர் மாவட்டம் 398.6 92.1 -77
2 இராமநாதபுரம் மாவட்டம் 369.6 140.8 -62
3 ஈரோடு மாவட்டம் 269.4 48.1 -82
4 கடலூர் மாவட்டம் 515.5 92.8 -82
5 கரூர் மாவட்டம் 263.7 38.2 -86
6 கன்னியாகுமரி மாவட்டம் 434.9 139.4 -68
7 காஞ்சிபுரம் மாவட்டம் 508.8 54.8 -89
8 கிருஷ்ணகிரி மாவட்டம் 254.8 43.2 -83
9 கோயம்புத்தூர் மாவட்டம் 281.5 97.2 -65
10 சிவகங்கை மாவட்டம் 335.6 86.8 -74
11 சென்னை மாவட்டம் 634.3 94.9 -85
12 சேலம் மாவட்டம் 314.7 42.1 -87
13 தஞ்சாவூர் மாவட்டம் 403 137.2 -66
14 தர்மபுரி மாவட்டம் 283.8 53 -81
15 திண்டுக்கல் மாவட்டம் 347.1 177.6 -49
16 திருச்சிராப்பள்ளி மாவட்டம் 313.1 104.9 -66
17 திருநெல்வேலி மாவட்டம் 367.6 152.6 -58
18 திருப்பூர் மாவட்டம் 267.7 176.1 -34
19 திருவண்ணாமலை மாவட்டம் 364.4 70.9 -81
20 திருவள்ளூர் மாவட்டம் 472.3 33.4 -93
21 திருவாரூர் மாவட்டம் 504.3 158.1 -69
22 தூத்துக்குடி மாவட்டம் 336.7 145.4 -57
23 தேனி மாவட்டம் 306.7 125.4 -59
24 நாகப்பட்டினம் மாவட்டம் 652.9 191.3 -71
25 நாமக்கல் மாவட்டம் 255.6 31.6 -88
26 நீலகிரி மாவட்டம் 399.1 135.6 -66
27 புதுக்கோட்டை மாவட்டம் 305.1 102.1 -67
28 பெரம்பலூர் மாவட்டம் 346 92.8 -73
29 மதுரை மாவட்டம் 357.5 171.9 -52
30 விருதுநகர் மாவட்டம் 353.4 115.4 -67
31 விழுப்புரம் மாவட்டம் 381.6 100.6 -74
32 வேலூர் மாவட்டம் 290.4 38.1 -87

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்". தினமணி. 30 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2016.
  2. "Northeast monsoon sets in TN". தி இந்து. 30 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2016.
  3. "This monsoon may present a stark contrast to the last one". தி இந்து. 27 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.
  4. "காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது: தமிழ்நாடு வெதர்மேன்". தி இந்து. 3 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Districtwise Rainfall Status". Regional Meteorological Centre, Chennai. 13 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு". தி இந்து (தமிழ்). 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.
  7. "காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது: தமிழ்நாடு வெதர்மேன்". தி இந்து (தமிழ்). 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.
  8. "T.N. grapples with cyclone havoc". தி இந்து. 14 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. "Water level in reservoirs rises; Palar gets a lifeline". தி இந்து. 14 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. "Districtwise Rainfall Status". Regional Meteorological Centre, Chennai. 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.

வெளியிணைப்புகள்

தொகு