வர்த்தக முத்திரை சட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம்
வர்த்தக முத்திரை சட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம் (Singapore Treaty on the Law of Trademarks) என்பது 28 மார்ச் 2006 அன்று சிங்கப்பூரில் உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] இது சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, பல்கேரியா, ருமேனியா, டென்மார்க், லாட்வியா, கிர்கிஸ்தான், அமெரிக்கா, மால்டோவா மற்றும் ஆத்திரேலியா ஆகிய பத்து நாடுகளின் ஒப்புதல் அல்லது இணைந்ததைத் தொடர்ந்து,[2] 16 மார்ச் 2009 அன்று நடைமுறைக்கு வந்தது.[3] வர்த்தக முத்திரை பதிவு மற்றும் உரிமத்தின் நடைமுறை அம்சங்களுக்கான பொதுவான தரநிலைகளை ஒப்பந்தம் நிறுவுகிறது.
நாடுகள்
கையொப்பமிடபப்ட்டது, பின்னேற்பு வழங்கப்படவில்லை | |
கையெழுத்திட்டது | 28 மார்ச்சு 2006 |
---|---|
இடம் | சிங்கப்பூர் |
நடைமுறைக்கு வந்தது | 16 மார்ச்சு 2009 |
நிலை | 10 பின்னேற்பு |
கையெழுத்திட்டோர் | 59 |
தரப்புகள் | 54 |
வைப்பகம் | உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநர் |
மொழிகள் | ஆங்கிலம், அரபு, சீனம், பிரஞ்சு, உருசியா மற்றும் எசுப்பானியம் |
மே 2023 நிலவரப்படி, ஒப்பந்தத்தில் 54 ஒப்பந்த நாடுகள் கையொப்பமிட்டன. இதில் 52 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க அறிவுசார் சொத்து அமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துக்கான பெனலக்சு அமைப்பு ஆகியவை அடங்கும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ WIPO, Negotiators adopt Singapore Treaty to facilitate international trademark registration பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம், Press Release 442, Geneva/Singapore, March 28, 2006.
- ↑ WIPO, Singapore Treaty on the Law of Trademarks to Enter into Force in 2009, PR/2008/581, Geneva, December 17, 2008.
- ↑ Singapore Treaty on the Law of Trademarks at the World Intellectual Property Organization (WIPO). Consulted on December 25, 2008.
- ↑ World Intellectual Property Organization (WIPO), Contracting Parties > Singapore Treaty (Total Contracting Parties : 54) (as of May 2023).
வெளி இணைப்புகள்
தொகு- WIPO லெக்ஸ் தரவுத்தளத்தில் வர்த்தக முத்திரைகள் சட்டம் குறித்த சிங்கப்பூர் ஒப்பந்தம் — உலக அறிவுசார் சொத்து நிறுவனம் இன் அதிகாரப்பூர்வ இணையதளம்.
- வர்த்தக முத்திரைகள் சட்டம் குறித்த சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் முழு உரை (in ஆங்கில மொழி)