வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் ஐம்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வலங்கைமான் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியதின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வலங்கைமானில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,891 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 40,423 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 56 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

விருப்பாட்சிபுரம் • விளத்தூர் • வேலங்குடி • வீராணம் • வீரமங்கலம் • வடக்குப்பட்டம் • ஊத்துக்காடு • உத்தமதானபுரம் • தொழுவூர் • திருவோணமங்கலம் • தெற்குப்பட்டம் • தென்குவளவேலி • சித்தன்வாழுர் • சாரநத்தம் • புளியக்குடி • பூந்தோட்டம் • பூனாயிருப்பு • பெருங்குடி • பாப்பாக்குடி • பாடகச்சேரி • நார்த்தாங்குடி • நல்லூர் • முனியூர் • மூலாழ்வாஞ்சேரி • மேலவிடையல் • மாத்தூர் • மருவத்தூர் • மாணிக்கமங்கலம் • மணலூர்  • மணக்கால் • மாளிகைத்திடல் • மதகரம் • கொட்டையூர் • கீழவிடையல் • கண்டியூர் • களத்தூர் • அரித்துவாரமங்கலம் • கோவிந்தகுடி • ஏரிவேளுர் • இனாம்கிளியூர் • சந்திரசேகரபுரம் • ஆவூர் • அவளிவநல்லூர் • அரவூர் • அன்னுக்குடி • ஆலங்குடி • ஆதிச்சமங்கலம் • 85 கிளியூர் • 83. ரெகுநாதபுரம் • 44. ரெகுநாதபுரம்

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Panchayat Unions of Thiruvarur District
  3. வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்