வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/3
பிரம்மா இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர் ஆவார். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்களுள் பிரம்மா படைத்தல் தொழிலுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். இவர் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையில் வேதன் என குறிப்பிடப்படுகிறார்.
இந்த தெய்வத்தை வேதாந்தத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் பிரம்மத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
பிரம்மாவின் மனைவியாக சரஸ்வதி இருக்கிறார். மகனாக நாரதரை இந்துக்கள் குறிப்பிடுகின்றனர்,.