வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/1
- திருமாலின் அவதாரங்கள் என்று அறியப்பெறும் தசாவதரங்களையும் சேர்த்து இருபத்தியைந்து அவதாரங்களை குறிப்பிடுகிறது பாகவத புராணம்.
- பஞ்சாமிர்தம் என்பது தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களின் கலவையால் செய்யப்படுவதால் ஐந்தமுது என்றும் அழைக்கப்பெறுகிறது.
- ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற 60,000 அரம்பையர்கள் (அப்சரஸ்கள்) பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள்.