வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா/ஞாயிறு
- தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும்.
- இந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்துவிளக்கும் நூல்களே தலபுராணங்கள் ஆகும்.
- எழுத்துவர்த்தனம் என்பது சித்திரக் கவி வகைகளில் ஒன்று. பாடலில் எழுத்தின் விரிவு வளரும்.