வலைவாசல்:தமிழீழம்/அறிமுகம்
தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்.
தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.
தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.
தமிழீழம் பற்றி மேலும் அறிய... |
- குறிப்பு. அறிமுக பக்கத்தில் இடம்பெறும் படிமங்கள் இங்கு உள்ளன.