வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/3
பாலு மகேந்திரா தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர்,இலங்கையில், மட்டக்களப்பில் பிறந்தவர்; இயற்பெயர், பெஞ்சமின் மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலை கல்வி படிப்பினை முடித்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவினைப் பயின்றார். அங்கு தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டவர், பாலு. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.
பல்வேறு கருப்பொருள் கொண்ட கதைகளை யதார்த்தமாக உலகத் தரத்திற்கு இணையாக இயக்கியுள்ளார். "மூன்றாம் பிறை", "அழியாத கோலங்கள்", "வீடு", "சந்தியா ராகம்", "மறுபடியும்", "மூடு பனி" முதலியன இவருடைய புகழ் பெற்ற படங்களில் சில.
பாலுவின் பட்டறையிலிருந்து வெளிவந்த பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக திகழ்கின்றனர். "சேது","நந்தா","பிதாமகன்" போன்ற தனித்துவமான படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.