வளையபுரோப்பீனோன்
வளையபுரோப்பீனோன் (Cyclopropenone) என்பது C3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த அரோமாட்டிக் சேர்மத்தை சைக்ளோபுரோப்பீனோன் என்ற பெயராலும் அழைக்கலாம்[1][2]. வளையபுரோப்பீன் கார்பன் சட்டக கட்டமைப்புடன் ஒரு கீட்டோன் வேதிவினை குழு இச்சேர்மத்தில் இடம்பெற்றுள்ளது. நிறமற்று காணப்படும் இச்சேர்மம் அறைவெப்ப நிலைக்கு அருகில் கொதிக்கும் தன்மை கொண்டதாகவும் எளிதில் ஆவியாகக் கூடிய சேர்மமாகவும் உள்ளது[3]. தூய்மையான வளையபுரோப்பீனோன் அறைவெப்பநிலையில் உள்ளபோதே பலபடி வினைக்கு உட்படுகிறது[4]. வளையபுரோப்பீனோனின் வேதியியல் பண்புகள் இதிலுள்ள கார்போனைல் குழுவின் வலுவான துருவமுனைப்பால் ஆதிக்கம் செலுத்துகின்றன. வளையத்தின் மீது ஒரு பகுதி நேர்மின் சுமையையும் ஆக்சிசனில் ஒரு பகுதி எதிர்மின் சுமையையும் வழங்கி அரோமாட்டிக் தன்மையை உறுதிப்படுத்துகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-சைக்ளோபுரோப்பேன்-1-ஒன்
| |
வேறு பெயர்கள்
சைக்லோபுரோப்பீனோன், சைக்ளோபுரோப்பீன்-3-ஒன்
| |
இனங்காட்டிகள் | |
2961-80-0 | |
ChemSpider | 121433 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 137779 |
| |
பண்புகள் | |
C3H2O | |
வாய்ப்பாட்டு எடை | 54.05 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | −29 to −28 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Experiments show cyclopropenone is aromatic". Chem. Eng. News 61 (38): 33. 1983. doi:10.1021/cen-v061n038.p033.
- ↑ Peart, Patricia A.; Tovar, John D. (2010). "Poly(cyclopropenone)s: Formal Inclusion of the Smallest Hückel Aromatic into π-Conjugated Polymers". J. Org. Chem. 76 (15): 5689–5696. doi:10.1021/jo101108f.
- ↑ R. Breslow, J. Pecoraro, T. Sugimoto "Cyclpropenone" Org. Synth. 1977, vol. 57, pp. 41. எஆசு:10.15227/orgsyn.057.0041
- ↑ Breslow, Ronald; Oda, Masaji (1972-06-01). "Isolation and characterization of pure cyclopropenone". Journal of the American Chemical Society 94 (13): 4787–4788. doi:10.1021/ja00768a089. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.