நீர் முடிச்சு
நீர் முடிச்சு (Water knot) என்பது, தட்டையான நாடாக்களின் இரு முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சாகும். இதை, நாடா முடிச்சு (tape knot), புல் முடிச்சு (grass knot), ஊடுதொடர் நுனிமுடிச்சு (overhand follow-through) போன்ற வேறு பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. மலையேறுதலில் தாங்கு கயிறுகளை உருவாக்கும்போது இதனைப் பயன்படுத்துவர்.
நீர் முடிச்சு | |
---|---|
பெயர்கள் | நீர் முடிச்சு, நாடா முடிச்சு, வளையத் தொடுப்பு, புல் முடிச்சு, ஊடுதொடர் நுனி முடிச்சு |
வகை | தொடுப்பு |
தொடர்பு | நுனி முடிச்சு, பீர் முடிச்சு, நுனித் தொடுப்பு |
பொதுப் பயன்பாடு | மலையேறுதலில் நாடாக்களைத் தொடுத்தல் |
எச்சரிக்கை | முனைகள் நீளமாக விடப்படல் வேண்டும், முடிச்சுகள் இறுக்கப்பட்டு ஒவ்வொரு தடவை பயன்படுத்த முன்னும் பரிசோதிக்க வேண்டும். அவிழ்ப்பது கடினம். |
ABoK |
|
முடிதல்
தொகுமுதலில் ஒரு நாடாவின் முனையில் நுனி முடிச்சு ஒன்று போடப்படும். பின்னர் அடுத்த நாடாவின் முனையை எதிர்த் திசையில் இருந்து முடிச்சினுள் செலுத்தி முதல் நாடாவை தொடர்ந்து செல்லவேண்டும்.
முனைகள் 3 அங்குலமாவது நீண்டிருக்குமாறு விட்டு முழு உடல் நிறையையும் பயன்படுத்தி முடிச்சை இறுக்கிக் கொள்ளவேண்டும். மீண்டும் வழுக்கிக்கொண்டு வெளியில் வராமல் இருக்க, முனைகளை ஒட்டு நாடாக்களினால் அருகில் உள்ள நிலைப்பகுதியோடு ஒட்டிவிடலாம் அல்லது தைத்து விடலாம்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ Craig Luebben, Knots for Climbers (Evergreen, Colorado: Chockstone Press, 1993), 19.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- நீர் முடிச்சுப் போடும் முறையைக் காட்டும் நிகழ்படம் பரணிடப்பட்டது 2009-08-01 at the வந்தவழி இயந்திரம்
- அசைவூட்டிய விளக்கப்படம் பரணிடப்பட்டது 2009-12-28 at the வந்தவழி இயந்திரம்.