வள்ளியங்காவு தேவி கோயில்
வள்ளியங்காவு தேவி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பீருமேடு வட்டத்தில், திருவிதாங்கூர் ரப்பர் மற்றும் டீ கம்பெனியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், முண்டக்காயத்திற்கு அருகில் 35ஆம் மைலிலும் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துர்க்கை கோயிலாகும். [1]
செல்லும் வசதி
தொகுமுண்டக்காயம் 35ஆம் மைலிலிருந்து நியாயமான கட்டணத்தில் ஆட்டோ, ஜீப், டாக்சிகள் மூலமாக இவ்விடத்தை அடையலாம். [2]
புராணங்கள், நம்பிக்கைகள்
தொகுதுவாபர யுகம் போல் பழமையானதாக இக்கோயில் கருதப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் மனைவி திரௌபதியுடன் வனவாசத்தின் போது தற்போதைய பாஞ்சாலிமேட்டை அடைந்து நீண்ட காலம் இங்கு தங்கினர். அங்கு குடியேறிய பழங்குடியினர் அவர்களுக்கு உதவி செய்தனர். பாண்டவர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன், அவர்கள் துர்கா தேவியின் சிலையை பழங்குடித் தலைவரிடம் கொடுத்து, தேவிக்கு காணிக்கை செலுத்த கேட்டுக்கொண்டனர். பூஜை முறைகள் பற்றி அறியாத பழங்குடியினர் தங்கள் சொந்த மரபுகளைப் பின்பற்றியதால் தேவி பத்ராவாக மாறி, ஆக்ரோஷமான வடிவம் பெற்றார். அவ்விடம் பழங்குடியினர் வசிக்க முடியாத நிலைக்கு உள்ளானது. தேவி தற்போதைய வள்ளியங்காவினை அடைந்தார். வள்ளியடிக்காவு என்றிருந்த இடம் நாளடைவில் வள்ளியங்காவு ஆனது. பின்னர், 'வஞ்சிப்புழா தம்புரான்' ஆதிவாசி மூப்பனுக்கு அம்மனை வழிபட அனுமதி வழங்கினார். கோயில் கட்ட 22 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
பழங்குடியினரின் நாகரீகமற்ற வழிபாட்டு முறை தேவியின் சக்திகளை அதிகரித்தது.அதனை அறிந்த மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வர ஆரம்பிக்க, கோயில் பெயரும் புகழும் பெற்றது. நாகரீகமற்ற நடைமுறைகளைப் பின்பற்றியதன் காரணமாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயிலைக் கையகப்படுத்த மறுத்தது. மனித, மிருக பலிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பழங்குடியினரின் தலைவரான கந்தன்கோந்தியின் மரணத்திற்குப் பிறகு, கோயிலின் உரிமையைப் பெறுமாறு தேவசம்போர்டுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. 1993ஆம் ஆண்டில், கந்தன்கோந்தி இறந்தபின், கோவிலின் உரிமையை வாரியம் பெற்றது. கோவில் நிர்வாகத்திலும், பூஜை முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அருள்வாக்கின்படி சிவன், கணபதி, புவனேஸ்வரி தேவி, நாகராஜா, நாகயட்சி, காலயட்சி போன்ற துணைத்தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டன. நாளடைவில் கோயிலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
பூசைகள்
தொகுஇங்கு தினமும் எட்டு கால பூசைகள் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள்
தொகுமே மாதத்தில் (மீனம்) கோயில் விழாவும், பொங்கலும் மே மாதத்தில் (மீனம்) பல யாத்ரீகர்களின் முன்னிலையில் நடத்தப்படுகின்றன. துர்காஷ்டமி இங்கு கொண்டாடப்படகின்ற ஒரு முக்கியமான நிகழ்வாகும். செவ்வாய், வெள்ளி சிறப்பு வார நாட்களாகும். வெள்ளிக்கிழமைகளில் நாரங்கவிளக்கு, ஐஸ்வரிய பூசைகள் நிகழ்த்தப்பெறுகின்றன.