வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

சுப்பிரமணிய சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[2] இக்கோயிலின் கருவறை, மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டு, பழமையான குடைவரைக் கோயில் என்ற பெருமையை இக்கோயில் பெற்றுள்ளது.[3] சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் இது.[4] இது அகத்திய முனிவர் வழிபட்ட திருத்தலமாகும்.[5]

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் விமானம்
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் is located in தமிழ் நாடு
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
சுப்பிரமணிய சுவாமி கோயில், வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:8°22′49″N 77°36′52″E / 8.380383°N 77.614557°E / 8.380383; 77.614557
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:வள்ளியூர்
சட்டமன்றத் தொகுதி:இராதாபுரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
ஏற்றம்:125.21 m (411 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணிய சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத் திருவிழா[1]
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

இக்கோயிலின் சுப்பிரமணிய சுவாமி கையில் தாங்கிக் கொண்டிருக்கும் வேலானது, வைரங்கள் பதிக்கப்பட்டவையாகும்.

சுப்பிரமணிய சுவாமி கோயில், வள்ளியூர்

இந்து சமய சைவ அருளாளர் அருணகிரிநாதர் அருளிய 1,307 இசைப்பாடல்களைக் கொண்ட திருப்புகழ், இக்கோயிலின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது.

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 125.21 மீட்டர்கள் (410.8 அடி) உயரத்தில், (8°22′49″N 77°36′52″E / 8.380383°N 77.614557°E / 8.380383; 77.614557) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, வள்ளியூர் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

திருவிழா

தொகு

ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[6]

பராமரிப்பு

தொகு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[7]

தெய்வங்கள்

தொகு

மூலவர் சுப்பிரமணியர், அவரது துணை வள்ளி, நடராசர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

உசாத்துணைகள்

தொகு
  1. "4 ஆண்டுகளுக்குப் பிறகு வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்!" (in ta). https://tamil.samayam.com/latest-news/tirunelveli/valliyur-subrahmanya-swamy-temple-chithirai-thiruvizha-started-today-with-flag-hoisting-in-tirunelveli/articleshow/91198986.cms. 
  2. தினத்தந்தி (2023-04-29). "வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  3. "நெல்லை: முருகனுக்கு அரோகரா...வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்" (in ta). https://tamil.samayam.com/latest-news/tirunelveli/chithirai-thiruvizha-flag-hoisting-started-today-at-valliyur-subramanya-swamy-temple-in-tirunelveli/articleshow/99632082.cms. 
  4. மாலை மலர் (2021-04-29). "முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் வள்ளியூர் முருகன் கோவில்" (in ta). https://www.maalaimalar.com/devotional/temples/2021/04/29125102/2579624/Valliyur-Murugan-Temple.vpf. 
  5. shakthionline Team. "வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்". shakthionline. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  6. மாலை மலர் (2017-04-27). "வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/2017/04/27111341/1082238/valliyur-subramanya-swamy-temple-chithirai-festival.vpf. 
  7. "Arulmigu Subramaniaswamy Temple, Valliyoor - 627117, Tirunelveli District [TM038078].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.