வவுனிக்குளம்
வவுனிக்குளம் (Vavuni Kulam) இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளம் ஆகும். இது மல்லாவியில் இருந்து தென்கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் (2 மைல்) தொலைவில் அமையப்பெற்றது. இதன் அமைவிடம் சரியாக 09°05'19"N, 80°20'54"E. பாலி ஆற்றின் மூலம் நீரைப்பெறும் இயற்கையான குளமாகும். இது 88 சதுர மைல் (228 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடையது. இதன் பராமரிப்பு வட மாகாணசபையின் நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனிக்குளம் | |
---|---|
வட மாகாணத்தில் அமைவிடம் | |
அமைவிடம் | வட மாகாணம் |
ஆள்கூறுகள் | 09°05′19″N 80°20′54″E / 9.08861°N 80.34833°E |
வகை | செயற்கை ஆறு |
ஆற்று மூலங்கள் | பாலி ஆறு |
வடிநிலப் பரப்பு | 88 sq mi (228 km2)[1] |
மேலாண்மை முகமை | நீர்ப்பாசனத் திணைக்களம், வட மாகாண சபை |
நீர்க் கனவளவு | 35,300 acre⋅ft (43,541,909 m3)[1] |
வரலாறு
தொகுஇதற்கு நீரை வழங்கும் பாலி ஆறு முன்னாளில் பேலி வாவி என அழைக்கப்பட்டது.[2] இது 1954 ம் ஆண்டு அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 88 சதுர மைல் (228 சதுர கிலோமீட்டர்) நீரேந்தும் பரப்பளவுக்கு புனரமைக்கப்பட்டது.[2]
1960 ம் ஆண்டு காலத்தின் பிற்பகுதியில் இதன் அணைக்கட்டு சுமார் 2 மைல் (3 கிலோமீட்டர்) நீளமுடையதாகவும் 24 அடி (7 மீட்டர்) உயரமுடையதாகவும் இருந்தது. அப்போது அணையின் கொள்ளளவு 35,300 ஏக்கர் அடியாகவும் (43,541,909 கன மீட்டர்) இருந்தது. மேலும் இதிலிருந்து சுமார் 3,150 ஏக்கர் (1,275 ஹெக்டர்) நிலப்பரப்பிற்கு வழங்கப்பட்டு உள்ளது.[2] மேலும் குளத்தின் இடது பக்கம் 500 அடி கொண்ட (152) கலிங்கு உள்ளன. மேலும் வலதுபுறத்திலும் 1200 அடி (366 மீட்டர்) மற்றும் 700 அடி (213 மீட்டர்) நீர் வழிந்தோடும் வகையிலான கலிங்குகள் உண்டு. அதன் இடது மதகுகள் 4 அடி 6 அங்குலம் கொண்டதாகவும் வலது மதகுகள் 3 அடி 6 அங்குலம் கொணதாகவும் உள்ளன. மத்திய மதகின் விட்டமானது 18 அங்குலமாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் இது 6,900 ஏக்கர்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும் திறனைக் (கொள்ளவைக்) கொண்டிருந்தது.
இலங்கையின் வடமாகாண குளங்களுக்கு பல வழிகளில் நீர் கிடைக்கின்றது இதில் மழை நீர் பிரதானமானதாகும். மழை நீர் பிரதானமாக பல வழிகளில் கிடைக்கின்றது. அவற்றுள் வட கிழக்குப் பருவமழை, சூறாவளி மழை,உகைப்பு மழை என்பன பிரதானமாகும்.[சான்று தேவை] வட கிழக்குப் பருவமழை மார்கழி மாதம் தொடங்கி மாசி மாதம் வரையிலும் கிடைக்கப்பெறுகின்றது. மேலும் இந்த வடகிழக்குப் பருவமழையே இலங்கையின் பல பகுதிகளுக்கு தேவையான நீரைத் தருகின்றது. இருப்பினும் இதன் மூலம் கிடைக்க பெறும் மழை நீர் தென்மேற்குப் பருவமழை மூலம் கிடைக்க பெறும் மழை நீரின் அளவை விடக் குறைவாகும். இதனால் கிடைக்க பெறும் மழை நீர் அண்ணளவாக 1250 மில்லிமீட்டர் முதல் 2500 மில்லிமீட்டர் வரை கிடைக்கிறது
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Statistical Information of the Northern Province - 2014. வட மாகாண சபை. p. 93.
- ↑ 2.0 2.1 2.2 Arumugam, S. (1969). Water Resources of Ceylon (PDF). Water Resources Board. p. 300.