வாக்சுடாஃப் பகாஎண்
எண்கோட்பாட்டில், வாக்சுடாஃப் பகாஎண் (Wagstaff prime) என்பது,
நினைவுப் பெயர் | சாமுவேல் எஸ் வாக்சுடாஃப் இளையவர் |
---|---|
வெளியீட்டு ஆண்டு | 1989[1] |
வெளியீட்டாளர் | பாட்மன் பி. டி, ஜான் செல்பிரிட்ஜ், சாமுவேல் எஸ். வாக்சுடாஃப் இளையவர். |
அறியப்பட்ட குறிச்சொற்களின் எண்ணிக்கை | 44 |
முதல் உறுப்புகள் | 3, 11, 43, 683 |
அறியப்பட்ட மிகப்பெரிய உறுப்பு | (2138937+1)/3 |
OEIS குறியீடு | A000979 |
- (p ஒரு ஒற்றைப்படைப் பகா எண்) வடிவிலமைந்த பகாஎண்ணாகும்.
இப்பகாஎண்கள், "சாமுவேல் எஸ் வாக்சுடாஃப் இளையவர்" என்ற அமெரிக்கக் கணிதவியலாளரின் பெயரால் அழைக்கப்படுகின்றன. வாக்சுடாஃப் பகாஎண்கள் புதிய மெர்சென் அனுமானத்தில் இடம்பெற்றுள்ளன; இவை குறியாக்கவியலில் பயன்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்
தொகுமுதல் மூன்று வாக்சுடாஃப் பகாஎண்கள்: 3, 11, 43
அறியப்பட்ட வாக்சுடாஃப் பகாஎண்கள்
தொகுமுதல் வாக்சுடாஃப் பகாஎண்கள் சில:
- 3, 11, 43, 683, 2731, 43691, 174763, 2796203, 715827883, 2932031007403, 768614336404564651, … (OEIS-இல் வரிசை A000979)
அக்டோபர் 2023 வரை வாக்சுடாஃப் பகாத்தனிகளைத் தரக்கூடிய அடுக்கெண்கள்:
- 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 43, 61, 79, 101, 127, 167, 191, 199, 313, 347, 701, 1709, 2617, 3539, 5807, 10501, 10691, 11279, 12391, 14479, 42737, 83339, 95369, 117239, 127031, 138937[2] (அறியப்பட்ட அனைத்து வாக்சுடாப் பகாஎண்கள்)
- 141079, 267017, 269987, 374321, 986191, 4031399, …, 13347311, 13372531, 15135397 (சாத்தியமான வாக்சுடாப் பகாஎண்கள்) (OEIS-இல் வரிசை A000978)
பிப்ரவரி 2010 இல் டோனி ரெயிக்சு கீழுள்ள சாத்தியமான வாக்சுடாப் பகாஎண்ணைக் கண்டுபிடித்தார்:
இப்பகாஎண் 1,213,572 இலக்கங்களுடையது; மேலும் அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் மூன்றாவது பெரிய வாக்சுடாஃப் பகாஎண்ணாகும்.[3]
செப்டம்பர் 2013 இல் ரியான் பிராப்பர் என்பவர் மேலும் இரு சாத்தியமான வாக்சுடாஃப் பகாஎண்களைக் கண்டுபிடித்து அறிவித்தார்:[4]
இவை ஒவ்வொன்றும் 4 மில்லியனுக்கும் சற்று அதிகமான தசம இலக்கங்களைக் கொண்டவை. 4031399, 13347311 இரண்டுக்கும் இடைப்பட்ட அடுக்கெண்கள் எதுவும் சாத்தியமான வாக்சுடாஃப் பகாஎண்களைத் தரக்கூடியவாக உள்ளனவா என்பது அறியப்படவில்லை.
மீண்டும் ஜூன் 2021 இல் ரியான் பிராப்பர் மேலுமொரு சாத்தியமான வாக்சுடாப் பகாஎண்ணைக் கண்டுபிடித்தார்:[5]
இப்பகாஎண்ணின் தசம இலக்கங்கள் 4.5 மில்லியனை விடச் சற்றுக் கூடுதலாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Paul T. Bateman; John Selfridge; Wagstaff, Jr., S. S. (1989). "The New Mersenne Conjecture". American Mathematical Monthly 96: 125–128. doi:10.2307/2323195. https://archive.org/details/sim_american-mathematical-monthly_1989-02_96_2/page/125.
- ↑ "The Top Twenty: Wagstaff".
- ↑ "Henri & Renaud Lifchitz's PRP Top records". www.primenumbers.net. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
- ↑ New Wagstaff PRP exponents, mersenneforum.org
- ↑ Announcing a new Wagstaff PRP, mersenneforum.org
வெளியிணைப்புகள்
தொகு- John Renze and Eric W. Weisstein, "Wagstaff prime", MathWorld.
- Chris Caldwell, The Top Twenty: Wagstaff at The பிரைம் பெயிஜசு.
- Renaud Lifchitz, "An efficient probable prime test for numbers of the form (2p + 1)/3".
- Tony Reix, "Three conjectures about primality testing for Mersenne, Wagstaff and Fermat numbers based on cycles of the Digraph under x2 − 2 modulo a prime" பரணிடப்பட்டது 2021-03-30 at the வந்தவழி இயந்திரம்.
- List of repunits in base -50 to 50
- List of Wagstaff primes base 2 to 160