வாங்கனேர் (Wankaner), மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி மாவட்டத்தில் உள்ள வாஙகனேர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். மச்சு ஆற்றின் கரையில் உள்ள வாங்கனேர் நகரம் மோர்பி நகரத்திற்கு தென்கிழக்கே 27.6 கிலோ மீட்டர் தொலைவிலும், காந்திநகருக்கு வடகிழக்கே 230.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் வான்கனேர் சமஸ்தானத்தின்[2] தலைநகராக விளங்கியது.

வாங்கனேர்
நகரம்
வாங்கனேர் அரண்மனை
வாங்கனேர் அரண்மனை
வாங்கனேர் is located in குசராத்து
வாங்கனேர்
வாங்கனேர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வாஙகனேர் நகரத்தின் அமைவிடம்
வாங்கனேர் is located in இந்தியா
வாங்கனேர்
வாங்கனேர்
வாங்கனேர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°36′58″N 70°57′11″E / 22.61611°N 70.95306°E / 22.61611; 70.95306
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மோர்பி
ஏற்றம்81 m (266 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்43,881
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 10 வார்டுகளும், 8,907 வீடுகளும் கொண்ட வாங்கனேர் நகரத்தின் மக்கள் தொகை 43,881 ஆகும். அதில் ஆண்கள் 22,594 மற்றும் பெண்கள் 21,287 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.91% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.60% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.82%, இசுலாமியர் 20.13%, சமணர்கள் 2.70% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர். [3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India: Search Details". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
  2. "History of Jhalas". Archived from the original on 3 December 2019. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  3. Wankaner Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்கனேர்&oldid=3600935" இலிருந்து மீள்விக்கப்பட்டது