வாசனை (சிறுகதைத் தொகுப்பு)

வாசனை என்பது சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடாக இப்புத்தகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் 26 சிறுகதைகள் உள்ளன. இப்புத்தகத்தின் பதிப்புரிமை சுந்தர ராமசாமி அவர்களின் மனைவி கமலா ராமசாமி அவர்களுடையது. இத்தொகுப்புகளிலுள்ள சிறுகதைகளில் ஒன்றான வாசனை எனபதுவே இத்தொகுப்பின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இத்தொகுப்பிற்கு கே.என். செந்தில் முன்னுரை எழுதியுள்ளார். முன்னுரையில் அவர்,

வாசனை
நூலாசிரியர்சுந்தர ராமசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்367
ISBN978-93-80240-47-3

"வாளின்றி, கேடயம் மட்டுமே கொண்ட ஒரு வீரன் எதிராளியின் வாள்வீச்சு தன் மீது பாயாமல் தடுத்துக்கொள்வதுபோல் படைப்பை முன் வைத்துத் தான் படைப்பாளி வாழ்க்கையின் வாள்வீச்சைத் தடுத்துக் கொள்கிறான்.

என்ற சுந்தர ராமசாமியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார். கே.என். செந்தில் தன்னுடைய முன்னுரைக்கு யதார்த்தத்தின் அழகியலும்... நவீனத்துவத்தின் தீவிரமும்... என்று தலைப்பிட்டுள்ளார். மேலும், சுந்தர ராமசாமியின்

"சூட்சமமான மனங்கள், மென்மையான மனங்கள், மொழியின் தொனியிலிருந்து எண்ணற்ற விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் மனங்கள், படைப்பை வெறும் படைப்பாக மட்டும் கருதாமல் வாழ்க்கையின் கரைக்கு நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் தோணியாகப் பார்க்கின்றன. கரைசேர்ந்ததும் படைப்பெனும் தோணியிலிருந்து கீழே இறங்கி வாழ்க்கைக்குள் வெகுதூரம் போகின்றன".

என்ற வரிகள் இத்தொகுப்பின் முதல் பக்கத்தில் உள்ளன.

தொகுப்பிலுள்ள சிறுகதைகள்

தொகு
  • கோவில் காளையும் உழவு மாடும்
  • பிரசாதம்
  • சன்னல்
  • ஸ்டாம்பு ஆல்பம்
  • கிடாரி
  • வாழ்வும் வசந்தமும்
  • லீலை
  • முட்டைக்காரி
  • அழைப்பு
  • பல்லக்குத் தூக்கிகள்
  • வாசனை
  • ரத்னாபாயின் ஆங்கிலம்
  • குரங்குகள்
  • பள்ளம்
  • கொந்தளிப்பு
  • ஆத்மாராம் சோயித்ராம்
  • வழி
  • கோலம்
  • பக்கத்தில் வந்த அப்பா
  • விகாசம்
  • காகங்கள்
  • மேல்பார்வை
  • பட்டுவாடா
  • நாடார் சார்
  • களிப்பு
  • கதவுகளும் ஜன்னல்களும்

பின்னட்டைக் குறிப்புகள்

தொகு

இப்புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு:

'கூறியது கூறல்', 'போலச் செய்தல்' இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு. உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல்.
யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவ தருணங்களைத்
தேர்ந்த இசைக்கலைஞனைப்போல் ஸ்ருதி பிசகாமல் மீட்டும் சு.ரா. நேற்றின் வழித்தடத்திலிருந்து விலகி புதிய கருத்துகளைத் தேடி கண்டடைந்து முன்னோக்கிச் சென்ற
பயணத்தை துலக்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது. அவர் வரிகளின் இடையே விட்டுச் செல்லும் மெளன இடைவெளிகளைச் சுய ஆற்றலால் இட்டு நிரப்பிக்கொள்ளும்
வாசகன் தன் மனச்சுனைகளைப் பெரும் மன எழுச்சியோடு கண்டுகொண்கிறான்.எழுத்தாளனின் உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்களைப்போல் பரவசம் ஊட்டக்கூடியது என்று
சு.ரா.எழுதினார். அந்த உள்ளொளியை நம்பி ஏற்றுச் செயல்பட்ட ஒரு படைப்பாளியின் மகத்தான கலையுலகம் இது.

வெளி இணைப்புகள்

தொகு

கோவில் காளையும் உழவு மாடும் பரணிடப்பட்டது 2015-06-29 at the வந்தவழி இயந்திரம்