வாசுகி கணேசானந்தன்

வாசுகி கணேசானந்தன் (V. V. Ganeshananthan) அமெரிக்க ஆங்கிலப் புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், ஊடகவியலாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வாசுகி கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஹார்வார்ட் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்து பின்னர் அயோவா எழுத்தாளர் கல்லூரியில் இணைந்து 2005 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தை 2007 ஆம் ஆண்டில் பெற்றார். தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.

எழுத்துலகில் தொகு

இவரது எழுத்துக்கள் கிரந்தா, அத்திலாந்திக் மன்த்லி, வாசிங்டன் போஸ்ட், கொலம்பியா ஜர்னலிசம் ரிவ்யூ போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது முதல் புதினம், லவ் மெரேஜ் 2008 ஏப்பிரலில் வெளிவந்தது. இப்புத்தகம் பெண் புதின எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரேஞ்சு பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2008 ஆம் ஆண்டுக்கான வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

நூல்கள் தொகு

சிறுகதைகள் தொகு

கட்டுரைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

இணையத்தளம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுகி_கணேசானந்தன்&oldid=3228182" இலிருந்து மீள்விக்கப்பட்டது