லவ் மேரேஜ் (புதினம்)
லவ் மெரேஜ் (Love Marriage, காதல் திருமணம்) என்பது வாசுகி கணேசானந்தன் என்பவரால் இலங்கை, மற்றும் வட அமெரிக்காவைக் களங்களாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு ஆங்கில புதின நூல் ஆகும்.
நூலாசிரியர் | வாசுகி கணேசானந்தன் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
வகை | புனைகதை |
வெளியீட்டாளர் | ரான்டம் ஹவுஸ் |
வெளியிடப்பட்ட நாள் | ஏப்ரல் 2008 |
பக்கங்கள் | 302 |
ISBN | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1400066698 |
ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தால் 2008 ஏப்ரலில் வெளியிடப்பட்ட இந்நூல் வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையினால் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் புதினங்களுக்கான புதினங்களுக்கான பெய்லீசின் பெண்களின் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. புதிய எழுத்தாளரைக் கண்டுபிடிக்கும் பார்ன்சும் நோபிளும் என்ற அமைப்பினால் தெரிவு செய்யப்பட்டது.[1] கணேசானந்தன் ஆவார்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கான ஒரு பகுதியாக ஜமைக்கா கின்கெயிட் என்பவரின் மேற்பார்வையில் இப்புதினத்தை எழுதத் தொடங்கினார். குறிப்பிட்ட ஒரு குடும்பம் இலங்கையில் எவ்வாறு அரசியல் தாக்கத்தினால் பாதிக்கப்படுகிறது என்பதை இப்புதினம் எடுத்துச் செல்கிறது.[2] இக்கதையைச் சொல்லும் யாழினி என்ற இளம் பெண் 1983 சூலை 23 இல் நியூயார்க்கில் இலங்கைப் பெற்றோருக்குப் பிறந்தவர். இதே நாளிலேயே ஈழப்போரின் முக்கிய வரலாற்று நிகழ்வான கறுப்பு யூலை நடந்தேறியது. இப்புதினம் அமெரிக்காவில் இருந்து ரொறன்ரோவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியாக இருந்து இலங்கையை விட்டு வெளியேறி டொரோன்டோவில் குடியேறிய யாழினியின் மாமா ஒருவருடன் அவரது குடும்பம் ஒன்று சேர்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2015-01-12 at the வந்தவழி இயந்திரம் V.V. Ganeshananthan website
- ↑ Cicatrix,"Q&A with V.V. Ganeshananthan, author of "Love Marriage"". Sepia Mutiny. 23 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ V.V. Ganeshananthan,Ganeshananthan, V.V. (13 July 2008). "I Wrote a Story, Not the Whole Story". The Washington Post இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081013053050/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/07/11/AR2008071102389.html. பார்த்த நாள்: 12 May 2010.