வாசுதேவ சர்வபௌமா

வாசுதேவ சர்வபௌமா (Vasudeva Sarvabhauma) இந்தியாவைச் சேர்ந்த தத்துவஞானியும் நியாய சாத்திர அறிஞருமாவார்.[1][2] சர்வபௌம பட்டாச்சார்யா என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பொது சகாப்த காலத்தின் 13 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை வாசுதேவ சர்வபௌமா வாழ்ந்தார். மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள நகரமான நவதீப் ந்கரைச் சேர்ந்த இவர் பண்டைய மிதிலை பல்கலைக்கழகத்தில் நியாய சாத்திரம் படிக்க மிதிலை நகரம் சென்றார். அந்த நேரத்தில் பண்டைய மிதிலைப் பல்கலைக்கழகத்தில் நியாய சாத்திரத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த பக்சதாரா மிசுராவின் மாணவராக கல்வி கற்றார்.[3] அங்கு கற்றலுக்குக் கிடைத்த முழு நூல்களையும் மனப்பாடம் செய்தார். பின்னர் தர்க்கவியல் (நவ்ய நியாயா அல்லது புதிய தர்க்கம்) படிப்பதற்காக தனது சொந்த பள்ளியை நிறுவ நவதீப் நகரத்திற்குத் திரும்பினார். நவ்ய நியாயா இந்திய தத்துவப் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.[4][5]

வாசுதேவ சர்வபௌமா
Vasudeva Sarvabhauma
वासुदेव सर्वभौम
தாய்மொழியில் பெயர்वासुदेव सर्वभौम
பிறப்புநவதீப்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பண்டைய மிதிலை பல்கலைக்கழகம்
பணிமெய்யியலாளர் பேராசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நவ்யா நியாயா (புதிய தர்க்கம்)
காலம்13 - 14 ஆம் நூற்றாண்டு
பள்ளிநவ்யா நியாயா இந்திய தர்க்கவியல் பள்ளி
கல்விக்கழகங்கள்பண்டைய மிதிலை பல்கலைக்கழகம்
மொழிசமசுகிருதம்

பிறப்பு

தொகு

வாசுதேவ சர்வபௌமா தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள நவதீப் நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வித்யாநகரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[6] இவரது தந்தை பெயர் மகேசுவர விசாரதா என்பதாகும்.[7][8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. Keith, A. Berriedale (1914-10). "The Study of Sanskrit. By Pandit Lingesha Vidyābhusana Vedānta-Vāchaspati. Bombay, 1913." (in en). Journal of the Royal Asiatic Society 46 (4): 1099–1100. doi:10.1017/S0035869X00047626. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-0591. https://www.cambridge.org/core/journals/journal-of-the-royal-asiatic-society/article/abs/study-of-sanskrit-by-pandit-lingesha-vidyabhusana-vedantavachaspati-bombay-1913/C573EACA0554DE566B11DE08EFFE12F3. 
  2. Sharma, B. N. Krishnamurti (2000). History of the Dvaita School of Vedānta and Its Literature: From the Earliest Beginnings to Our Own Times (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1575-9.
  3. "Narahari Upadhyaya's Anumanakhandadusanoddharah (Gaekwad's Oriental Series-179) (An Old And Rare Book) | Exotic India Art". www.exoticindiaart.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  4. "Parishads: Vasudeva Sarvabhauma Bhattacharya". www.bvmlu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  5. Rao, C. V. Ramachandra (1977). "DID KRSNADEVARAYA MEET WITH DISCOMFITURE IN HIS EASTERN CAMPAIGN AGAINST PRATAPARUDRA GAJAPATI ?". Proceedings of the Indian History Congress 38: 218–221. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44139073. 
  6. "The Holy Places of Jaiva Dharma: Mithila". www.radha.name. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  7. "Sarvabhauma Bhattacharya House". mayapur.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  8. "LordGuaranga". www.divyajivan.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  9. Vidyabhusana, Satis Chandra (1988). A History of Indian Logic: Ancient, Mediaeval and Modern Schools (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0565-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவ_சர்வபௌமா&oldid=3605826" இலிருந்து மீள்விக்கப்பட்டது