வானளாவி
வழக்கமாக, 152 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்கள் வானளாவிகள் (skyscraper) எனப்படுகின்றன.
19 ஆம் நூற்றாண்டுவரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாமல் இருந்தது.
உருக்கு, வலுவூட்டிய காங்கிறீற்று (Concrete) மற்றும் நீரேற்றிகள் என்பவற்றின் உருவாக்கம், மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்ட இயன்றது. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி உயர்த்திகள் ஆகும்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நியூயார்க் நகரத்திலும், சிகாகோவிலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வில்லியம் லே பாரோன் ஜென்னி, ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம் என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிகாகோவில் வடிவமைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் "பீல்ட்ஸ்" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது.
வானளாவிகளின் பாரம் தாங்கும் கூறுகளும், குறிப்பிடத்தக்க அளவு ஏனைய கட்டிடங்களில் இருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையான கட்டிடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கும்படி அமைக்க முடியும். வானளாவிகள் மிக உயரமானவை ஆதலால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப் படுகின்றன. சுவர்கள் இச் சட்டகங்களின் மீது தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குமுகமாக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது.
மிக உயர்ந்த வானளாவிகளின் ஒப்பீடு
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- http://www.skyscrapers.com பரணிடப்பட்டது 2022-01-26 at the வந்தவழி இயந்திரம்
- http://www.skyscrapercity.com
- http://www.skyscraperpage.com
- http://www.brazilskyscrapers.hpg.com.br பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம்
- http://www.bionictower-bvs.com/ பரணிடப்பட்டது 2004-06-11 at the வந்தவழி இயந்திரம் (1228m Shanghai tower project)
- http://www.skyscraper.org
- https://web.archive.org/web/20040522093404/http://www.geocities.com/birmingham_highrise/
- http://www.popsci.com/popsci/science/article/0,12543,420169-1,00.html