உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(வானளாவிகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வானளாவிகளின் பட்டியல் (List of Skyscrapers) இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வரைவிலக்கணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் உலகில் அதிகமான உயர்ந்த கட்டடங்களைக் கொண்ட நாடான ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்கள் வானளாவிகள் என வரையரை செய்யப்பட்டுள்ளன.

Tallest buildings in the world (over 400m)
தனியாக நிற்கும் கட்டப்பட்ட அமைப்புகளில் உலகிலேயே மிக உயரமான கட்டுகோபுரம். இது கனடாவில் உள்ள சி.என் கோபுரம் (CN Tower) ஆகும்

இப்பட்டியல் உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள், கோபுரங்கள் முதலியவற்றை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் இன்று இல்லாத சில கட்டிடம்/கோபுரங்கள் சாய்வெழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் எல்லா கட்டிடங்களும்/கோபுரங்களும் குறிக்க முயலவில்லை.

தரம் Building[A][1] நகரம் நாடு உயரம் அடுக்குகள் கட்டப்பட்டது
1 புர்ஜ் கலிஃபா டுபாய்  ஐக்கிய அரபு அமீரகம் 828 மீ 2,717 அடிகள் 163 2010
2 தயிபெய் 101 தயிபேய்  தாய்வான் 508 மீ[2] 1,667 அடிகள் 101 2004
3 சங்காய் உலக நிதி மையம் சங்காய்  சீனா 492 மீ 1,614 அடிகள் 101 2008
4 பன்னாட்டு வர்த்தக மையம் ஹொங்கொங்  ஆங்காங் 484 மீ 1,588 அடிகள் 108 2010
5 பெட்ரோனாஸ் கோபுரங்கள் கோலாலம்பூர்  மலேசியா 452 மீ 1,483 அடிகள் 88 1998
6 நாஞ்சிங் பசுமையகம் நிதி மையம் நாஞ்சிங்  சீனா 450 மீ 1,476 அடிகள் 89 2010
7 வில்லீசு கட்டடம் சிக்காகோ  ஐக்கிய அமெரிக்கா 442 மீ 1,451 அடிகள் 108 1974
8 குவாங்தோ பன்னாட்டு நிதி மையம் குவாங்தோ  சீனா 438 மீ 1,435 அடிகள் 103 2010[C]
9 இட்ரம் பன்னாட்டு கட்டடம்[3] சிக்காகோ  ஐக்கிய அமெரிக்கா 423 மீ 1,389 அடிகள் 98 2009
10 ஜின் மாவோ கட்டடம் சங்காய்  சீனா 421 மீ 1,380 அடிகள் 88 1999
11 அல் அம்ரா கட்டடம் குவைட் நகரம்  குவைத் 413 மீ 1,353 அடிகள் 77 2010[B]
12 பன்னாட்டு நிதி மையம் ஹொங்கொங்  ஆங்காங் 412 மீ 1,353 அடிகள் 88 2003
  • குறிப்பு: இந்த பட்டியல் முழுமையானது அல்ல.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Former world's tallest buildings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.