வானியலாளர் (ஓவியம்)


ஓவியத்துறையில் வானியலாளர் என்பது டச்சு ஓவியரான யொகான்னசு வெர்மீர் என்பவரால் 1668 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட ஓவியத்தைக் குறிக்கும். எண்ணெய் வண்ணம் கொண்டு 51 சமீ x 45 சமீ அளவுள்ள கன்வசில் வரையப்பட்ட இவ்வோவியம் தற்போது பாரிசு நகரில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது]].[1]

வானியலாளர்
JohannesVermeer-TheAstronomer(1668).jpg
ஓவியர்யொகான்னசு வெர்மீர்
ஆண்டுc. 1668
வகைஎண்ணெய் வண்ண ஓவியம்
பரிமாணம்51 cm × 45 cm (20 in × 18 in)
இடம்லூவர் அருங்காட்சியகம், பாரிசு

அறிவியலாளர்களை வரைபொருள் ஆக்குவது 17 ஆம் நூற்றாண்டு டச்சு ஓவியங்களில் விருப்பத்துக்குரிய விடயமாக இருந்தது. வெர்மீர் வரைந்த ஓவியங்களுள் இவ்வாறான ஓவியங்களாக இதுவும், இதன் பின்னர் வரையப்பட்ட "புவியியலாளர்" என்னும் ஓவியமும் அடங்கும். இரண்டு ஓவியங்களிலும் உள்ளவர் ஒருவராகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது,[2][3][4] பெரும்பாலும் ஆன்டனி வான் லீவன்கூக் (Antonie van Leeuwenhoek) ஆக இருக்கலாம்.[5]

படத்தில் இருப்பவர் வானியலாளர் என்பதைக் காட்டுவதற்காக புவிக் கோளமும், மெட்டியசு (Metius) என்பவர் எழுதிய வானியல் தொடர்பான நூலொன்றும் ஓவியத்தில் வரையப்பட்டுள்ளன. குறியீடாக, ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள புத்தகம் நூலின் மூன்றாம் பகுதி தெரியுமாறு விரித்து வைக்கப்பட்டுள்ளதாம். அம்மூன்றாம் பகுதி இறைவனிடம் இருந்து தூண்டுதல் பெறுமாறு வானியலாளர்களுக்கு அறிவுரை கூறும் பகுதி. ஓவியத்திலுள்ள சுவரில் காணப்படும் படத்தில் மோசஸ் காட்டப்பட்டுள்ளார். மோசஸ் அறிவுக்கும், அறிவியலுக்கும் குறியீடாகக் காட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


குறிப்புக்கள்தொகு

  1. "L'Astronome ou plutôt L'Astrologue" (French). Atlas: the database of the exhibited works of art. Musée du Louvre. பார்த்த நாள் 2006-10-14.
  2. Bailey, Anthony (2001). Vermeer: A View of Delft. பக். 165–170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8050-6930-5. http://essentialvermeer.20m.com/cat_about/astronomer.htm. 
  3. Bailey, Martin (1995). Vermeer. பக். 102–104. http://essentialvermeer.20m.com/cat_about/astronomer.htm. 
  4. van Berkel, Klaas. "Vermeer and the Representation of Science". The Scholarly World of Vermeer. பக். 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-400-9825-5. http://essentialvermeer.20m.com/cat_about/astronomer.htm. 
  5. Van Berkel, K. (February 24 1996). Vermeer, Van Leeuwenhoek en De Astronoom. Vrij Nederland (Dutch magazine), p. 62–67.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியலாளர்_(ஓவியம்)&oldid=1356615" இருந்து மீள்விக்கப்பட்டது