வாயு உணரி புரதம்
வாயு ஏற்பி (gasoreceptor) அல்லது வாயு உணரி புரதம் (gas sensor protein) என்பது மூலக்கூறுகளுக்கிடையேயான வாயு சம்பந்தப்பட்ட சமிக்கைகளைக் கண்டறிந்து செயல்படுத்தும் ஒரு வகைப் புரதம் ஆகும். பல்வேறு உயிரியல் செயல்முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் வழிமுறைகளில் இது பங்கு வகிக்கிறது.
புரத மூலக்கூறுகளாலான வாயு ஏற்பிகள் பொதுவாக உயிரணுகளின் உயிரணுக்கணிகத்தில் காணப்படுகிறது. வாயுமூலக்கூறுகளின் சமிக்சைகளை பிணைப்பதின் மூலம் மற்றும் வாயுக்களை உணர்தல் மூலமாக உயிரணுகளுக்கு இடையே சமிக்சைகளை ஏற்படுத்துவதில் இப்புரதம் சிறப்பாக செயல்படுகிறது. உயிரணுகளுக்கு இடையேயும் உயிரணுகளுக்குள்ளும் சமிக்சைகளை பரிமாற்றம் செய்வதில் இப்புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களில் எத்திலீன், பாலூட்டிகளில் நைட்ரிக் ஆக்சைடு, நுண்ணுயிரிகளில் கார்பன் மோனோஆக்சைடும் ஒட்சிசனும் வாயு உணர்வுத் தன்மையுடைய வாயுஏற்பிகளின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. சமிக்கைகளைக் கடத்தும் செயல்பாட்டில் ("குறுக்குக் கடத்துகை") வாயுக் கரைபொருளின் பிணைப்பால் தொடர்ச்சியான வேதியியல் மாற்றங்கள் செல்களில் நிகழ்கிறது. ஐதரசன் சல்பைடு மற்றும் மீத்தேன் வாயுக்களுக்கான ஏற்பிகள் குறித்த ஆய்வுகள் சோதனையில் உள்ளது.
வாயுக்களைப் பிணைப்பதற்கு அனைத்து வாயு ஏற்பிகளுக்கும் உலோகத் துணைக்காரணிகள் அல்லது அயனிகள் மற்றும் உலோகப் புரதம் (metalloprotein) தேவைப்படுகிறது. உதாரணமாக எத்திலின் வாயு ஏற்பிகளுக்கு செப்பு உலோகப் புரதம் மற்றும் கரையக்கூடிய குவானிலைல் சைக்லேசு நைட்ரிக் ஆக்சைடு குருதித் துணை இரும்பு உலோகப் புரதம் (hemoprotein) காரணிகள் தேவைப்படுவதைக் கூறலாம்.[1][2][3][4]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Q&A: How do plants respond to ethylene and what is its importance?". BMC Biology 14: 7. January 2016. doi:10.1186/s12915-016-0230-0. பப்மெட்:26819080. பப்மெட் சென்ட்ரல்:4730734. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4730734.
- ↑ "Environmental heme-based sensor proteins: implications for understanding bacterial pathogenesis". Antioxidants & Redox Signaling 17 (9): 1232–1245. November 2012. doi:10.1089/ars.2012.4613. பப்மெட்:22494151.
- ↑ Taabazuing, Cornelius Y.; Hangasky, John A.; Knapp, Michael J. (April 2014). "Oxygen Sensing Strategies in Mammals and Bacteria". Journal of inorganic biochemistry 133: 63–72. doi:10.1016/j.jinorgbio.2013.12.010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0162-0134. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4097052.
- ↑ Anbalagan, Savani (April 2024). "Oxygen is an essential gasotransmitter directly sensed via protein gasoreceptors.". Animal models and experimental medicine 7 (2): 189-193. doi:10.1002/ame2.12400. பன்னாட்டுத் தர தொடர் எண்:2576-2095. பப்மெட்:38529771. https://pubmed.ncbi.nlm.nih.gov/38529771/. பார்த்த நாள்: 9 July 2024.