வார்டு கன்னிங்காம்
விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மத்தை முதலில் உருவாக்கியவர், வார்டு கன்னிங்காம் (பிறப்பு - மே, 26, 1949) (ஆங்கிலம்:Howard G. "Ward" Cunningham) என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான வடிவமைப்புப் பாங்கு, அதி நிரலாக்கம் (Extreme programming) என்பவைகளின் முன்னோடியும் ஆவார்.
வார்டு கன்னிங்காம் | |
---|---|
கன்னிங்காம், போர்ட்லன்ட் (ஒரிகன்), 2011. | |
பிறப்பு | மே 26, 1949 மெக்சிகன் நகரம், இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடு[1] |
தேசியம் | அமெரிக்கர் |
பணி | கணினி நிரலர் |
செயற்பாட்டுக் காலம் | 1984 தொடக்கம் |
அறியப்படுவது | விக்கியை முதலில் நடைமுறைபடுத்தியவர் (WikiWikiWeb) |
Call-sign | K9OX |
இவர் முதன்முதலில், 1994 ஆம் ஆண்டு விக்கிவிக்கிவெப் (WikiWikiWeb) என்ற கணினிநிரலைத் தொடங்கி, தனது நிறுவன இணையத்தளத்திலே, மார்ச்சு, 25 ந்தேதியன்று, 1995 ஆண்டில் நிறுவினார்.[2]
'மிகச்சிறிதான ஒன்றிய விக்கியை'(Smallest Federated Wiki[3]) உருவாக்குவதே, இவரது தற்போதைய திட்டம் ஆகும். இதன் மூலம் ஒரு பயனர் மேலும் எளிதாக விக்கித்திட்டப்பக்கங்களை பயன்படுத்த முடியும்.
இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும். [4]
ஊடகங்கள்
தொகு-
ஒரு விக்கிநிரல் வசதி
-
அதி நிரலாக்கம்
-
மெக்சிகன் நகரம்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Ward's Home Page". பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
- ↑ he started programming the software en:WikiWikiWeb in 1994 and installed it on the website of his software consultancy, en:Cunningham & Cunningham c2, on March 25, 1995, as an add-on to the PPR.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
- ↑ According to en:Steven McGeady, Cunningham advised him in the early 1980s, "The best way to get the right answer on the Internet is not to ask a question, it’s to post the wrong answer."
புற இணைப்புகள்
தொகு- WikiWikiWeb, including his WikiHomePage
- 2012 Dr. Dobbs Interview
- EclipseCon 2006 interview with Ward Cunningham (MP3 audio podcast, running time 20:01) பரணிடப்பட்டது 2013-09-15 at the வந்தவழி இயந்திரம்
- Cunningham & Cunningham, Inc.
- The Microsoft patterns & practices group home page
- A Laboratory For Teaching Object-Oriented Thinking (paper introducing CRC Cards)
- The Simplest Thing That Could Possibly Work (2004 interview)
- "The Web's wizard of working together பரணிடப்பட்டது 2009-03-31 at the வந்தவழி இயந்திரம்" - profile originally in The Oregonian, December 19, 2005
- Ward's Personal Pages
- WardCunningham கிட்ஹப் இணையதளத்தில்