காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. புலிகள் இதனை மறுத்துள்ளனர்.(பிபிசி)
கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.(புதினம்)
மன்னாரில்இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.(புதினம்)