வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2009
- ஜூன் 29: கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இராசலிங்காம் நகுலேஸ்வரன் என்ற மத போதகர் காணாமல் போயுள்ளார். (தமிழ்வின்)
- ஜூன் 27: யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பெண் தொண்டு பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- ஜூன் 25:
- வீரகேசரி நாளிதழின் ஊடகவியலாளர் கிருஸ்னி கந்தசாமி வத்தளையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு கண்டியில் வைத்து விடுவிக்கப்பட்டார். (தமிழ்வின்)
- யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனுவும், வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பு மனுவும் தெரிவத்தாட்சி அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. (தமிழ்வின்)
- யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 3 நாளேடுகளின் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீ வைக்கப்பட்டது. (தமிழ்வின்)
- ஜூன் 24:
- வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப்பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்க மூலம் எடுத்து செல்லப்படும் என டில்லியில் இலங்கை-இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. (தமிழ்வின்)
- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளதாக அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் அறிவித்தது. (தமிழ்வின்)