வார்ப்புரு பேச்சு:இந்து புனிதநூல்கள்

There are no discussions on this page.

மதிப்புமிகு அய்யா எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்! வார்ப்புருவில் வேதாங்கங்கள் என எழுதியிருப்பது சரிதானா? எனக்குத் தெரிந்த வரையிலும் வேதாந்தங்கள் என்றுதான் படித்திருக்கிறேன். ரிபுகீதை, அஷ்டாவக்கரகீதை, பவத்கீதை, நாநாஜீவ வாதகட்டளை, கைவல்ய நவநீதம்,ஞானவாசிஷ்டம்,யோகவாசிஷ்டம், இப்படி பல வேதாந்த புத்தகங்களும் என்னிடமுள்ளது. அவற்றின் முகப்பில் வேதாந்தங்கள் என்றுதான் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வார்ப்புருவை கடந்த சூன் 5ஆம் தேதி கண்ணுற்ற போது வேதாந்தங்கள் என்று திருத்தினேன், மீண்டும் வேதாங்கங்கள் என திருத்தப்பட்டுள்ளதே!! ஒருவேலை நான் திருத்திய வேதாந்தங்கள் தவறோ? என அய்யம் எழுந்துள்ளது. அருள் கூர்ந்து எனக்கு தெளிவுபடுத்துங்களேன்.. நன்றியுடன்....--Yokishivam (பேச்சு) 10:13, 11 சூலை 2015 (UTC)

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: --மதனாகரன் (பேச்சு) 12:43, 12 சூலை 2015 (UTC)

==வேதாந்தாங்கள் என்பது வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்திருக்கும் உபநிடதங்களைக் குறிக்கும். வேதாங்கங்கள் என்பது வேதத்திற்கு அங்கமாக அமைந்துள்ள இலக்கணம், ஜோதிடம் ஆகியவைகளைக் குறிக்கும்.....நன்றியுடன்....--பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 12 சூலை 2015

Return to "இந்து புனிதநூல்கள்" page.