வால்ட்டர் சிட்னி ஆடம்சு

வால்ட்டேர் சிட்னி ஆடம்சு (Walter Sydney Adams டிசம்பர் 20, 1876 - மே 11, 1956) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வானியியலாளர் ஆவார்.[1][2][3][4][5]

வால்ட்டர் சிட்னி ஆடம்சு
வால்ட்டர் சிட்னி ஆடம்சு
பிறப்பு(1876-12-20)திசம்பர் 20, 1876
அண்டியோச், துருக்கி
இறப்புமே 11, 1956(1956-05-11) (அகவை 79)
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
பணியிடங்கள்மவுண்ட் வில்சன் வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்டார்த்மவுத் கல்லூரி
விருதுகள்
  • ராயல் வானியல் சொசைட்டியின் தங்கப்பதக்கம் (1917)
  • ஹென்றி டிரெப்பர் பதக்கம் (1918)
  • வால்சு பரிசு (1923)
  • புரூஸ் பதக்கம் (1928)
  • ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

வால்ட்டேர் சிட்னி ஆடம்சு துருக்கி அந்தியோக்கியா நகரில் 1876இல் கிறித்தவ மதப்பரப்புனர்கள் லூசியன் ஆடம்சு, நான்சி ஆடம்சு ஆகியோருக்குப் பிறந்தார்.[6] 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காக்குக் குடிபெயர்ந்தார்.[1] 1898 இல் டார்த்மவுத் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் முதுவர் பட்டம் பெற்றுள்ளார். 1901இல் இருந்து யெர்கேசு வான்காணகத்தில் ஜார்ஜ் ஹேலின் கீழ் உதவியாளராகப் பணிபுரிந்தார். இருவரும் 1904இல் மவுண்ட் வில்சன் வான்காணகத்துக்கு இடம் மாறினர். அங்கு ஆடம்சு 1913 முதல்1923 வரை உதவி இயக்குநராகவும் 1923இல் இருந்து இயக்குநராகவும் 1940 வரையிலும் பணிபுரிந்தார்.

இவரது தொடக்க காலப் பணி சூரியக் நிறமாலையியலில் இருந்தாலும் பிறகு விண்மீன் கதிர்நிரலியலுக்கு மாறியது. இவர் கதிர்நிரலைக் கொண்டே குறளை விண்மீனையும் பெருவிண்மீனையும் பிரித்துணரலாம் என்பதைக் கண்டுபிடித்தார். என்றாலும் இவருக்குப் பெரும்புகழ் தந்தது சீரசு விண்மீனுடன் ஒரேவட்டணையில் சுற்றிவரும் சீரசு-பி யைப் பற்றிய ஆய்வேயாகும்.[7]

1924இல் இவர் பெருமுயற்சி எடுத்து கதிர்நிரலாய்வு வழியாக செம்பெயர்ச்சிக்கான நோக்கீடுகளைப் பதிவு செய்தார். சீரசு-பி ஆய்வை இது முழுநிறைவாக்கியதோடு, ஐன்சுடைனின் பொது சார்பியல் கோட்பாட்டுக்கான நல்ல சான்றை வழங்கியது.

இவரது நினைவாக சிறுகோள் ஒன்றுக்கு 3145 வால்ட்டர் ஆடம்சு என்ற பெயரிடப்பட்டது. செவ்வாயின் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. நிலாவின் பள்ளம் ஒன்றுக்கு ஜான் கவுச் ஆடம்சு, சார்லசு இட்ச்காக் ஆடம்சு ஆகியோருடன் இணைந்து ஆடம்சு என்ர பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 எஆசு:10.1098/rsbm.1956.0001
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. MNRAS 117 (1957) 243
  3. Obs 76 (1956) 139
  4. PASP 68 (1956) 285
  5. Wright, Helen (1970). "Adams, Walter Sydney". Dictionary of Scientific Biography 1. New York: Charles Scribner's Sons. 54–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-10114-9. 
  6. http://www.amphilsoc.org/mole/view?docId=ead/Mss.B.Ad19-ead.xml#bioghist
  7. F. Wesemael, A comment on Adams' measurement of the gravitational redshift of Sirius B Royal Astronomical Society, Quarterly Journal (ISSN 0035-8738), 26, Sept. 1985, 273-278
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்டர்_சிட்னி_ஆடம்சு&oldid=4031696" இலிருந்து மீள்விக்கப்பட்டது