வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோயில்
வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வாள்வச்சகோஷ்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கன்னியாகுமரி |
அமைவிடம்: | வாள்வச்சகோஷ்டம், காட்டாத்துறை, விளவங்கோடு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பத்மநாபபுரம் |
மக்களவைத் தொகுதி: | நாகர்கோயில் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மகிஷாசுரமர்த்தினி |
வரலாறு | |
கட்டிய நாள்: | மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலானது தரைமட்டத்திலிருந்து ஏறக்குறைய மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்குச் செல்ல படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டைக் கடந்தால் இருபுறமும் திண்ணையுடன் கூடிய அனுப்பு மண்டபம் உள்ளது. அதை அடுத்து முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபமானது ஆறு தூண்கள் கொண்டதாக உள்ளது. இந்தத் தூண்களில் நடராசர், காளி, அர்ஜூனன், கர்ணன், இந்திரஜித், லக்ஷ்மணன் ஆகியோரது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தின் வாசலில் இருபுறமும் துவாரபாலகிகள் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் மகிஷாசுரமர்த்தினி நின்ற கோலத்தில் சன்னதியில் அருள்பாளிக்கிறார். மேலும் இங்கு விநாயகர் உபசன்னதியும் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
விழாக்கள்
தொகுகோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்களுக்கு திருவிழா நடக்கின்றது. விழாவின் ஒன்பதாவது நாளன்று மாலையில் அம்மன் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு ஏழு முறை கோயிலைச்சுற்றி வலம் வருகிறாள். அதற்கு பள்ளி வேட்டை என்று பெயர். பத்தாவது நாள் காலையில் அம்மனுக்கு ஆறாட்டு நடத்தப்படும்.அத்துடன் திருவிழா முடிவடையும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ முனைவர் தா.அனிதா (31 மே 2018). "வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2018.