விகாசு கவுடா
விகாசு கவுடா (Vikas Gowda) (பிறப்பு 5 சூலை 1983) ஓர் இந்திய வட்டெறி வீரரும் குண்டெறி வீரரும் ஆவார்.[1] இவர் மைசூரில் பிறந்து அமெரிக்காவில் மேரிலாந்தில் வளர்ந்தவர். இவரது தந்தையார் சிவே கவுடா இந்திய ஒலிம்பிக் தடகளக் குழுவிற்கு 1988 ஆம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில் விகாசு கவுடாவிற்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | விகாசு சிவெ கவுடா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறந்த நாள் | 5 சூலை 1983 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறந்த இடம் | மைசூர், கருநாடகம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 2.06 m (6 அடி 9 அங்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 140 kg (310 lb; 22 st) (2014) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளப் போட்டி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | வட்டெறிதல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணி | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் பட்டங்களும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
தன்னுடைய சிறப்பானவை | வெளிக்களம்: 66.28 மீ NR (ஏப்பிரல் 2012) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இற்றைப்படுத்தப்பட்டது 23 ஆகத்து 2015. |
இவர் சேப்பல் இல்லில் உள்ள வடக்கு கரோலைனா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய கல்லூரி தடகள சங்கம் நடத்திய தடகளப் போட்டியில் வட்டு எரிதல் போட்டியில் இவர் தேசிய சாம்பியன் ஆவார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ IAAF Profile
- ↑ Tar Heels' Vikas Gowda wins discus title. Tar Heel Times (10 June 2006)