விகாரி ஆண்டு
ஒரு தமிழ் ஆண்டு
விகாரி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திமூன்றாம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் எழில்மாறல் என்றும் குறிப்பர்
விகாரி ஆண்டு வெண்பா
தொகுவிகாரி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்
பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில் குறைவாக மழை பொழியும், நிலத்தடி நீர் மட்டம் குறையும். உணவு உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும். திருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும் என்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "விகாரி". பொருள். விக்சனரி. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ வேங்கடசுப்பிரமணியன் (11 ஏப்ரல் 2019). "விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)