விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு16

சிம்போ வேல்சுடனும் சூ கார்டனருடனுமான சந்திப்பு தொகு

வரும் ஞாயிறன்று சிம்போ வேல்சுடனும் சூ கார்டனருடனும் சந்திக்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அப்பொழுது தமிழ் விக்கிப்பீடியா (மற்றும் பிற விக்கித் திட்டங்கள்) சார்பில் ஒரு வாழ்த்து மடலை நம் திட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் ஒரு சிறப்பு அட்டையில் அச்சிட்டுத் தரலாம் என்று எண்ணுகிறேன். இதனால் இவர்களைச் சந்திக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர்கள் நம்மைப் பற்றிப் பேச ஏதுவாகும். நான் எனது தம்பிக்கான வாழ்த்து மடல் ஒன்றை ஏற்கனவே இது போல் அச்சிட்டுள்ளேன். வாழ்த்துப் பத்தி (ஒன்றிரண்டு வரிகள்) + அறிமுகப் பத்தி (6-9 வரிகள்) தமிழில் கூட்டாக உருவாக்கலாம், பின்னர் நான் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இரண்டையும் அச்சிட்டுக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:58, 10 டிசம்பர் 2008 (UTC)

தகவலுக்கு நன்றி சுந்தர்! திட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் வாழ்த்து தருவது பற்றிய உங்கள் கருத்து அருமையானது. பயனும் மகிழ்ச்சியும் உடடயதாக அமைய வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியைப் பற்றிக் கூறுங்கள் (கட்டாயம் கூறுவீர்கள்தான் :) ). தரக்கட்டுப்பாட்டில் மிகப்பல அளவீடுகளில் இந்திய மொழிகளுள் தமிழ் முதலாக உள்ளதை எடுத்துக்காட்டுங்கள். இந்திய மொழிகளில் முன்னணி விக்கி என்பதால் இது முக்கியமான செய்தி. நாம் இன்னும் பெரு வளர்ச்சி அடைய துடித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதையும், நம் பயனர்களின் எண்ணிக்கை கடந்த ஒரிரு ஆண்டுகளில் இருமடங்காக பெருகியுள்ளதையும் சுட்டிக் காட்டுங்கள். ˘சூ 'கார்டனர், ஒரு கனடியர், அவரிடம் கனடாவில் இருந்தும் சிலர் ஆர்வமுடன் தமிழ் விக்கிக்குப் பங்களிக்கிறார்கள் என்று கூறுங்கள் :) அதிகமாக பங்களிக்கும் நற்கீரன் கனடாவில் வாழ்கிறார். math குறியீடுகளில், சமன்பாடுகளில் தமிழ் எழுத்தையும் பயன்படுத்த இயலாமல் இருப்பதின் குறைபாட்டைத் தெரிவியுங்கள். பொதுவாக விக்கித் தொழில் நுட்பம் தமிழ் மொழியில் அழகாகப் பயன்படுத்த இயல்வது பற்றியும், கலைக்களஞ்சியம் உருவாக்கும் இவ்வாய்ப்பின் அருமையைப் பலரும் வியந்து பாராட்டுகிறார்கள் என்றும் கூறுங்கள். உண்மையிலேயே இணையமும், இந்த கூட்டுழைப்பு விக்கியும் ஒரு புரட்சிதான். குறைபாடுகள் இருப்பதை அறிவோம். --செல்வா 15:02, 10 டிசம்பர் 2008 (UTC)
நல்ல செய்தி. மிக்க மகிழ்ச்சி சுந்தர். --சிவக்குமார் \பேச்சு 15:57, 10 டிசம்பர் 2008 (UTC)
நன்றி சிவா.
கருத்துக்கு நன்றி செல்வா. நீங்கள் சொல்லியுள்ளவற்றை கட்டாயம் பேசுவேன். -- சுந்தர் \பேச்சு 16:13, 10 டிசம்பர் 2008 (UTC)
கனடாவைச் சேர்ந்த பயனர்:நிரோஜன் சக்திவேல் என்னும் 21 அகவை நிரம்பிய இளைஞர் 2,000 கட்டுரைகளுக்கும் மேலாக குறுங்கட்டுரைகள் எழுதியுள்ளார் என்றும் அவற்றுள் பெரும்பாலும் திரைப்படங்கள், நாடகங்கள், நிகழ்பட விளையாட்டுகள், பாண்டிய அரசர்கள் பற்றியவை என்றும் கூறுங்கள். இளைஞர்கள், வருங்காலத் தலைமுறையினர் பங்களிப்பது யாருக்கும் ஊக்கம் ஊட்டும் செய்தி. --செல்வா 16:31, 10 டிசம்பர் 2008 (UTC)
கனடியரான ˘சூ 'கார்டனரிடம், நற்கீரன், நிரோ, மற்றும் உங்களைப் பற்றிச் சொன்னால் கட்டாயம் உளமகிழ்ச்சி கொள்வார் என்றே நினைக்கிறேன். கட்டாயம் சொல்வேன். -- சுந்தர் \பேச்சு 16:41, 10 டிசம்பர் 2008 (UTC)
சுந்தர், உங்களுடைய எண்ணமும், செல்வாவின் ஆலோசனைகளும் மிக நன்று. இது ஒரு நல்ல வாய்ப்பு. உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மயூரநாதன் 16:56, 10 டிசம்பர் 2008 (UTC)
மிக்க மகிழ்ச்சி சுந்தர். எங்கே சந்திப்பு? இந்தியா? இந்தியாவில் அங்கீகரிக்கபப்ட்ட 22 மொழிகளில் 18 அப்படித்தான் விக்கிப்பீடியா உண்டு. Indian Wikimedia Chapter பற்றி கேட்டுப்பாருங்கள். இந்தியாவில் விக்கிப்பீடியா ஒட்டு மொத்தமாக முன்னேற்றினால் தமிழ் விக்கியும் பயன்பெறும். விக்கி கணிதத்தை காட்ட பயன்படுத்துவது MHTML என்று நினைக்கிறேன், எனவே அதைப் பற்றி அவர்கள் என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. ஆனால் கேட்டுப்பாக்கலாம். ஒப்பீட்டளவில் தமிழ் நல்ல தரம், ஆனால் மலையாளம் இணையாக, அல்லது சற்று மேலே என்று சொல்லாம் (எனது கணிப்பு). தமிழ் விக்சனரி பற்றியும், அதில் நீங்கள் எவ்வாறு 100 000 சேர்த்தீர்கள் பற்றியும் குறிப்பிடலாம். --Natkeeran 17:05, 10 டிசம்பர் 2008 (UTC)
நன்றி மயூரநாதன், நற்கீரன். சந்திப்பு இந்தியாவில்தான், பெங்களூரில். விக்கிமீடியா இந்தியப் பிரிவு பற்றி பேசுவோம். அவர்களே அது பற்றிப் பேச விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். தரத்தைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். மேற்கோள்கள் பயன்படுத்துவதில் நாம் காட்டும் முனைப்பு பற்றியும் அவர்களது கவனத்துக்குக் கொண்டு வருவேன்.
ஆம், விக்சனரி பற்றியும் பேச வேண்டும், இரவியும் நானும் திட்டமிட்டு தானியங்கி கொண்டு சொற்களைப் பதிவேற்றியது பற்றி சொல்கிறேன். நற்கீரன், விக்கிப்பீடியா அறிமுகப் பக்கம் ஒன்றை நீங்கள் உருவாக்கினீர்களல்லவா? அதற்கு இணைப்பு தாருங்கள்.
எனக்கு வந்த அழைப்பு இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள ஒரு சிறு கூட்டத்தை ஒட்டிய சந்திப்புக்கு. இது தவிர விக்கிமீடியா நிறுவனத்தினர் சென்னை, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களில் விக்கிப்பீடியர்களைச் சந்திக்க உள்ளனர். சிவா, இரவி, நீங்கள் சென்னையிலோ பெங்களூரிலோ நடைபெரும் சந்திப்பில் பங்கேற்க விரும்பினால் cary@wikimedia.org என்ற மின்முகவரிக்கு அஞ்சல் செய்யுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:11, 11 டிசம்பர் 2008 (UTC)

நான் ஆங்கிலத்தில் பின்வரும் செய்தியை எழுதியுள்ளேன். இதில் தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். நாளை இதை தமிழ் மொழிபெயர்ப்புடன் அச்சிடவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 13:36, 11 டிசம்பர் 2008 (UTC)


A sincere thanks from the Tamil Wikipedia community for providing us a great platform to build a unique resource in our native language. Wikipedia and its sister platforms have helped in advancing the cause of linguistic pluralism and knowledge accessible to all in almost every spoken language. We are particularly happy for being able to document a wealth of human knowledge in the classical language, Tamil.

Today, we have over 16,231 articles in Tamil Wikipedia on topics as wide-ranging as Cantor's diagonal argument, Bonobo, Mautam, Peristaltic motion, Orgasm, Giffen good, Theory of Evolution, Leptons, Cartoon physics, Buddhism, and Pongal. We focus on the quality of articles with particular emphasis on citing reliable sources. We have also been tracking the performance of Tamil Wikipedia on various quality metrics like number of articles longer than 2 kb, mean bytes, etc., and we can proudly say that we lead all Indian language wikipedias in most metrics, with Malayalam and Manipuri being close competitors.

The number of active editors has increased from 2 in 2004 to about 30 editors now spread all over the globe. A number of new editors register at the site everyday counting over 5000 to date. We are reaching a critical inflection point in this aspect. Healthy debates happen over policy decisions. The scientific vocabulary in Tamil has been enriched with phrases coined ab initio from commonly used Tamil roots. Tamil Wiktionary is another big sister project. With over 1,00,000 meanings, it stands among the top ten wiktionaries in the world. Other Wiki projects like Wikibooks are yet to gain momentum.

The only significant worry is that most active Wikipedians are Tamil people settled in countries like Canada, Saudi Arabia, Australlia etc., whereas the number of editors from India and Sri Lanka does not grow on par. The Indian Wikimedia Chapter, when it gets formed, should address this issue.


Nats Comments தொகு

Sundar, it seems good. Few suggestions,

  • 'to all in almost every spoken language' -> 'in/to many languagues.' (over 6000 languagues, only about 250 Wikipedias)
  • 'with Malayalam being the close competitor' -> Most of Manipuri articles are about places, auto wrote. In recent days, very little activity has taken place there.
  • 'top ten wiktionaries in the world.' -> 'top ten wiktionaries.'
  • 'The only significant worry' - 'A major concern for us is that...'
  • I would add Malyasia, even perhaps Singapore....these are established Tamil Communities.

--Natkeeran 14:55, 11 டிசம்பர் 2008 (UTC)

I agree with each of your suggestions. Will update accordingly. -- சுந்தர் \பேச்சு 15:03, 11 டிசம்பர் 2008 (UTC)
No one from Saudi Arabia! மயூரநாதன் 16:17, 11 டிசம்பர் 2008 (UTC)
Oops, UAE. :p -- சுந்தர் \பேச்சு 16:19, 11 டிசம்பர் 2008 (UTC)

நல்ல திருத்தங்களை நற்கீரன் பரிந்துரைத்திருக்கின்றார். தற்பொழுது பதிவு செய்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 5,798. மேலும் "The scientific vocabulary in Tamil has been enriched with phrases coined ab initio from commonly used Tamil roots." என்பதை மாற்றி எழுத வேண்டும் என நினைக்கின்றேன். எ. கா: The scientific and vocabulary in Tamil has been enriched with phrases coined ab initio from commonly used Tamil roots, as has been the practice and tradition in Tamil, perhaps for millenia. இதற்கு வலு சேர்க்கும் பல ஆய்வுரைகள் உண்டு. இது ஏதோ புதிய முயற்சி என்று அவர்கள் நினைக்ககூடும். தமிழில் எல்லா சொற்களும் பொருள்குறித்தனவே என்றும், சொற்கள் மிகப்பெரும்பாலும் காரணப்பெயர்களாக தமிழில் இருப்பதும் தொன்மரபு என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழ் நெடிய இலக்கண, இலக்கிய மரபுகள் கொண்ட மொழி. அறிவியல், தொழிலியல் இலக்கியம் கடந்த 200 ஆண்டுகளில் போதிய அளவு உருப்பெற்று வளரவில்லை எனலாம். தமிழில் கணிதம், பொறியியல், பல்வேறு வேதியியல், செடியியல், மருத்துவம், மெய்யியல், இசையியல் நூல்களும் செய்முறை வழக்காகவும் முன்னர் இருந்தன. கலைச்சொற்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்துபட்டன. பொற்கொல்லர்களும், கருமார்களும், பல்வேறு வினைக்கலைஞர்களும் வழிவழியாய் வழங்கிவந்த கலைச்சொல்லாட்சிகள் மறைந்துவிட்டன. கலைச்சொற்களில் வளம் மிக்க மீனவர்களின் மொழியும், வேளாளர்களின் மொழியும், நெசவாளர்கள் மொழியும், மரவேலை, கல்வேலை செய்யும் கலைஞர்களின் மொழியும் குன்றி அருகிவிட்டன. தமிழரின் வானியல் கோட்பாடுகளும், கணிதக் கோட்பாடுகளும் இருந்ததாக நம்பக்கூட இயலாத வகையில் அருகிவிட்டன. எகிப்திய, கிரேக்க, இலத்தீன, சீன, தென்னமெரிக்க நாட்டு மக்களின் வரலாறுகளைக் கூர்ந்தாய்வது போல தமிழர்களின் வரலாறு நோக்கப்படும் பொழுது பல இலைமறை காயாக இருக்கும் செய்திகள் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகிறேன்.விரிந்து விட்டது மன்னிக்கவும் --செல்வா 18:26, 11 டிசம்பர் 2008 (UTC)

நீங்கள் மேலே சொல்லியுள்ளது மிகச்சரி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்று தொல்காப்பியம் சொல்லுக்குச் சொல்லி வைக்கவில்லை என்பது கண்கூடு. காரணப்பெயர்கள் மிகுதியாய் இருப்பதோடு உணர்வொலிக் கிளவிகளும் மிகுதியாக இருப்பதையும் பார்க்கலாம்.
இடைப்படு பொழுதில் மங்கியிருந்த இவ்வழக்கத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக விக்கி களம் அமைத்துத் தந்துள்ளதாகத்தான் கருதுகிறேன். மேலே நான் எழுதியது ஒரு முதல்நிலை வரைவு மட்டுமே. விருப்பப்படி திருத்தி உதவுங்கள். இன்னும் ஓரிரு மணி நேரத்தில் அச்சகத்துக்கு எடுத்துச் செல்வேன். -- சுந்தர் \பேச்சு 04:05, 12 டிசம்பர் 2008 (UTC)

திருத்திய வரைவு -1 தொகு

மேலே பரிந்துரைத்துள்ள திருத்தங்களுடன் சேர்த்து நானும் சில செய்திகளை இணைத்துள்ளேன். சரிபார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 09:11, 12 டிசம்பர் 2008 (UTC)


To Jimbo Wales, Founder, Wikipedia

To Sue Gardener, CEO, Wikimedia Foundation

A sincere thanks from the Tamil Wikipedia community for providing us a great platform to build a unique resource in our native language. Wikipedia and its sister platforms have helped in advancing the cause of linguistic pluralism and knowledge accessible to all in so many languages. We are particularly happy for being able to document a wealth of human knowledge in the classical language of Tamil.

Today, we have 16,239 articles in Tamil Wikipedia on topics as wide-ranging as Cantor's diagonal argument, Bonobo, Mautam, Peristaltic motion, Orgasm, Giffen good, Theory of Evolution, Leptons, Cartoon physics, Buddhism, and Pongal. We focus on the quality of articles with particular emphasis on citing reliable sources. We have also been tracking the performance of Tamil Wikipedia on various quality metrics like number of articles longer than 2 kb, mean bytes, etc., and can proudly say that we lead all Indian language wikipedias in most metrics, with Malayalam being a close competitor.

The number of active editors has increased from 2 in 2004 to about 30 editors now spread all over the globe. More than 50,000 page visits have been recorded. A number of them register at the site everyday counting 5,798 to date. We are reaching a critical inflection point in this aspect. Apart from the number of editors, we are pleased with the diversity in terms of nationality, profession, specialisation, age, and philosophy. However, female editors are far fewer. Healthy debates happen routinely over policy decisions. Wikipedia has enabled the enrichment of the Tamil scientific vocabulary with phrases coined ab initio from commonly used Tamil roots, continuing on the millennia-old tradition. Tamil Wiktionary is another promising sister project. With over 1,00,000 meanings, it stands among the top ten wiktionaries. Other Wiki projects like Wikibooks are yet to gain momentum.

A major concern for us is that most active Wikipedians are Tamil people settled in countries like Canada, United Arab Emirates, Australlia, Japan, etc., whereas the number of editors from India, Sri Lanka, Malaysia, and Singapore does not grow on par. The Indian Wikimedia Chapter, when it gets formed, should address this issue.


இறுதி வடிவம் தொகு

பிழையிருந்தால் திருத்தவும். -- சுந்தர் \பேச்சு 11:59, 12 டிசம்பர் 2008 (UTC) ---

விக்கிமீடியா நிறுவனத்தின் தலைவர் '˘சூ ''கார்டனர் அவர்களே

எங்கள் தாய்மொழியில் அரும்பெரும் களஞ்சியத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தமைக்கு தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவும் அதன் துணைத் திட்டங்களும் மொழிப்பன்மையை வளர்த்தெடுக்கவும், அனைவருக்கும் அறிவுசார் தகவல்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்துள்ளன. மனித குலத்தின் மொத்த கூட்டறிவை செம்மொழியாம் தமிழ் மொழியில் பதிந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இன்று தமிழ் விக்கிப்பீடியா கேண்ட்டரின் கோணல்கோடு நிறுவல்முறை, பொனொபோ, மௌடம், சுற்றிழுப்பசைவு, புணர்ச்சிப் பரவசநிலை, கிப்பன் பண்டம், படிவளர்ச்சிக் கொள்கை, மென்மி, பகடிப்பட இயற்பியல், பௌத்தம், பொங்கல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16,239 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. கட்டுரைகளின் தரத்தின்மீது, குறிப்பாகச் சான்றுகோள் சுட்டுதலைப் பற்றி, நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சராசரி கட்டுரை நீளம், நீளமான கட்டுரைகளின் எண்ணிக்கை போன்ற தரக்குறியீடுகளைக் கொண்டு எங்கள் வளர்ச்சியை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இவ்வளவீடுகளில் பலவற்றில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுள் முதலிடம் வகிப்பதில் பெருமையடைகிறோம். மலையாள விக்கியும் நெருங்கிய போட்டியாக உள்ளது.

கூடுதலாகத் தொகுப்புகள் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை 2004-ல் இரண்டிலிருந்து தற்பொழுது பல நாடுகளிலும் இருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 50,000 முறைகளுக்கும் மேல் கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. இவ்வாறு வருபவர்களில் பலர் பதிவு செய்து கொள்வதால் இப்பொழுது 5,798 பயனர்கள் உள்ளனர். இதில் நாங்கள் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளோம். பயனர் எண்ணிக்கை ஒருபுறமிருக்க, அவர்கள் சார்ந்திருக்கும் நாடு, தொழில், கல்வித்திறன், அவர்தம் அகவை, கொண்டுள்ள கொள்கை ஆகியவற்றிலுள்ள பல்வகைமை மேலும் களிப்பூட்டுகிறது. ஆனால் இன்னமும் பெண் பங்களிப்பாளர்கள் குறைவாகவே உள்ளனர். கொள்கை முடிவுகளின் பேரில் நல்லெண்ணத்துடன் கூடிய விவாதங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் தொன்றுதொட்ட வழக்கத்தின் தொடர்ச்சியாக, கலைச்சொற்களை முழுமையாக பொதுப்பயன்பாட்டில் இருக்கும் தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து உருவாக்குவதற்கு விக்கிப்பீடியா நல்லதொரு களம் அமைத்துத் தந்துள்ளது. தமிழ் விக்சனரியும் 1,00,000 சொற்பொருட்களுக்கும் மேலாகக் கொண்டு முதல் பத்து விக்சனரிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. விக்கிநூல்கள் முதலிய பிறத் திட்டங்கள் இன்னும் விரைவாக வளரத்துவங்கவில்லை.

கனடா, அமெரிக்காஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்த்திரேலியா, நிப்பான் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகுதியாகப் பங்களிக்கையில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து இணையான எண்ணிக்கையில் பங்களிக்க வராதது ஒரு குறையே. இந்திய விக்கிமீடியா பிரிவு துவங்கியதும் இக்குறையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

To Sue Gardener, CEO, Wikimedia Foundation

A sincere thanks from the Tamil Wikipedia community for providing us a great platform to build a unique resource in our native language. Wikipedia and its sister platforms have helped in advancing the cause of linguistic pluralism and knowledge accessible to all. We are particularly happy for being able to document a wealth of human knowledge in the classical language of Tamil.

Today, we have 16,239 articles in Tamil Wikipedia on topics as wide-ranging as Cantor's diagonal argument, Bonobo, Mautam, Peristaltic motion, Orgasm, Giffen good, Theory of Evolution, Leptons, Cartoon physics, Buddhism, and Pongal. We focus on the quality of articles with particular emphasis on citing reliable sources. We have also been tracking the performance of Tamil Wikipedia on various quality metrics like number of articles longer than 2 kb, mean bytes, etc., and can proudly say that we top all Indian language wikipedias in most metrics, with Malayalam being a close competitor.

The number of active editors has increased from 2 in 2004 to about 30 editors now spread all over the globe. More than 50,000 page visits per day are observed. A number of these users register at the site everyday counting 5,798 to date. We are reaching a critical inflection point in this aspect. Apart from the number of editors, we are pleased with the diversity in terms of nationality, profession, specialisation, age, and philosophy. However, female editors are far fewer. Healthy debates happen routinely over policy decisions.

Wikipedia has enabled the enrichment of Tamil scientific vocabulary with phrases coined ab initio from commonly used Tamil roots, continuing on the millennia-old tradition. Tamil Wiktionary is another promising sister project. With over 1,00,000 meanings, it stands among the top ten wiktionaries. Other Wiki projects like Wikibooks are yet to gain momentum.

A major concern for us is that most active Wikipedians are Tamil people living in countries like Canada, United States of America, United Arab Emirates, Australlia, Japan, etc., whereas the number of editors from India, Sri Lanka, Malaysia, and Singapore does not grow on par. The Indian Wikimedia Chapter, when it gets formed, should address this issue.

----

சிம்போவுக்கு முதல்வரி மட்டும் மாற்றம்.

விக்கிப்பீடியா நிறுவனர் '''சிம்போ வேல்சு அவர்களே,

To Jimbo Wales, Founder, Wikipedia


அச்சாயிற்று தொகு

செல்வாவின் திருத்தத்தைப் பார்க்காவிட்டாலும் அச்சிடும் முன் முதலிய என்ற சொல்லைச் சரி செய்து விட்டேன். அமெரிக்கா தான் விடுபட்டுவிட்டது. இந்த வடிவத்தில் அச்சிட்டு, பின்வருமாறு ஒப்பமிட்டு, நீர்புகா வண்ணம் ஆக்கியாயிற்று. பிழையிருந்தால் மன்னிக்கவும். -- சுந்தர் \பேச்சு 14:44, 12 டிசம்பர் 2008 (UTC)

அருமையாகச் செய்துவிட்டீர்கள், சுந்தர்! பாராட்டுகள்! எல்லாம் செவ்வனே நடந்தேற வாழ்த்துகள்! நிகழ்வை இங்கும் சிறிதேனும் பதிவு செய்வீர்கள்தானே? --செல்வா 22:49, 12 டிசம்பர் 2008 (UTC)
நன்றி செல்வா. கட்டாயம் குறிப்பெடுத்து வந்து இங்கு பதிகிறேன். இயன்றால் நிழற்படங்களும் பெற முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:54, 13 டிசம்பர் 2008 (UTC)

சந்திப்பு தொடர்பான குறிப்புகள் தொகு

 
 

சூவுடன் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அருண்ராம் என்ற ஆங்கில விக்கி பயனரும் உடனிருந்தார். இந்திய விக்கிமீடியாப் பிரிவையும் அதன்கீழ் ஒவ்வொரு மொழிக்கும் குழுக்களை அமைப்பதற்கும் துவக்கநிலைப் பேச்சு நடந்தது. CISஅமைப்பினர் இடவசதி செய்வதாகக் கூறினர். கன்னட விக்கியிலிருந்து அரிபிரசாத், மலையாள விக்கியிலிருந்து அனூப், தெலுங்கு விக்கியிலிருந்து அருச்சுணன், குசராத்தி மற்றும் ஆங்கில விக்கி பயனர் ஆகாசு ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன். மலையாள விக்கியில் திடீர் வளர்ச்சி மாத்ருபூமி இதழில் விக்கிப்பீடியாவைப் பற்றிய முழுப்பக்கச் செய்தியும் விளக்கமும் வந்த பின்னரே ஏற்பட்டது என்றும் ஆனால் இப்போதும்கூட மிகுதியாகப்பங்களிப்பவர்கள் எண்ணிக்கை 30-35 மட்டுமே என்றும் அனூப் கூறினார். மலையாளத்தில் தட்டச்சு செய்யும் செயலியைச் சேர்த்தது நல்ல பயன் தந்ததாகவும் தெரிவித்தார்.

வாழ்த்து அட்டைகளை சிம்போவிடமும் சூவிடமும் அளித்ததில் நல்ல வரவேற்பு இருந்தது. அவர்கள் மனதில் தமிழ் விக்கிப்பீடியா என்பது நன்கு பதிந்துள்ளது. நமது செயல்பாடுகளைப் பற்றிக் கேட்ட அவர்கள் மற்ற விக்கிகளிலும் இதுபோல செயல்படுத்தலாம் என்றனர். செய்தியாளர்களிடம் தமிழ் விக்கி பற்றி கட்டாயம் பேசுவோம் என்றனர். -- சுந்தர் \பேச்சு 12:20, 14 டிசம்பர் 2008 (UTC)

மேலும் கனடாவிலிருந்து பங்களிக்கும் மூவரைப்பற்றிக் கூறியதும் சூ மிகவும் மகிழ்ந்தார். நம் தர அளவீடுகளைப் பற்றிக்கேட்டு நம்மைப் பற்றிய ஒரு நன்மதிப்பு உண்டாகியிருப்பது தெரிந்தது. -- சுந்தர் \பேச்சு 12:23, 14 டிசம்பர் 2008 (UTC)

நன்றி சுந்தர். இந்தியா விக்கியூடக பிரிவு: http://meta.wikimedia.org/wiki/Wikimedia_India. இப்போது ஒரு வேலையும் இங்கு நடைபெறுவில்லை. எனினும் உங்கள் துவக்கநிலை பேச்சுக்கள் இதை மீள்பிக்க உதவும். அடுத்த ஆண்டு நாம் த.வி சந்தைப்படுத்தலை கவனப்படுத்தி செய்வோம். --Natkeeran 14:19, 14 டிசம்பர் 2008 (UTC)
மகிழ்ச்சியூட்டும் செய்தி. தமிழ் விக்கிப்பீடியாவை பற்றி மேலிடங்களில் ஓர் உந்தூட்டு தந்தமைக்கு நன்றி. இன்னும் இதுபோல் நிறைய செய்வோம். கனடியர்கள் எங்கிருந்தாலும், தம் நாட்டினர் பற்றி ஒரு நல்லுணர்வு, நாட்டின உணர்வு உண்டு :) எல்லா நாட்டவருக்கும் உண்டுதான், என்றாலும் சிறுநாடாகிய நாங்கள் வாழும் குளிநாடாகிய கனடாவில் இது வெய்யினிய உணர்வு :) --செல்வா 15:39, 14 டிசம்பர் 2008 (UTC)
நற்கீரன், தமிழ் விக்கியை சந்தைப்படுத்துதல் என்பதை சந்தையாற்றுதல் எனலாம். பணி ஆற்றினேன், செயல் ஆற்றினேன் என்னும் சொல்லாட்சிகள் போல், சந்தையாற்றினேன் (I marketed), சந்தையாற்ற வேண்டும் எனலாம். சந்தையேற்ற வேண்டும் என்றும் கூறலாம். சந்தையேற்று, சந்தயாற்று ஆகியவை market (verb) என்பதற்கு இணையாக ஆள உகந்தது. சந்தயேற்றல், சந்தையாற்றல் = marketing. தமிழ் விக்கிப்பீடியாவை இயன்றவாறு முனைந்து சந்தையாற்ற, சந்தையேற்ற வேண்டும் என்பதே என்னுடைய அவாவும்.--செல்வா 15:39, 14 டிசம்பர் 2008 (UTC)
கருத்துகளுக்கு நன்றி செல்வா, நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 17:01, 14 டிசம்பர் 2008 (UTC)
சுந்தர் உங்கள் முயற்சிகள் நல்ல பயன் கொடுக்கும் என்று நம்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவை சிறப்பாக அறிமுகப்படுத்துவதற்கு ஊடகங்களின் உதவி மிகவும் தேவை. ஊடகங்களில் அறிமுகம் உள்ளவர்கள் யாராவது இருந்தால் இதனைச் சுலபமாகச் செய்ய முடியும். பத்திரிகைகளில் மட்டுமன்றி தொலைக் காட்சிகளிலும் இணைய தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் உண்டு. உரிய இடங்களில் தொடர்புகள் இருந்தால் அல்லது உருவாக்கிக் கொண்டால் தான் ஊடகங்களில் இடம்பெறுவது இலகுவாக இருக்கும். மயூரநாதன் 17:14, 14 டிசம்பர் 2008 (UTC)
செல்வாவின் சந்தைப்படுத்துதல் தொடர்பான கருத்து நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் ஒருவர் கூறியதை ஞாபகப்படுத்துகிறது. ஒருமுறை நான் கூட்ட அறிக்கை ஒன்று எழுதியபோது "கூட்டம் முடிவடைந்தது" என எழுதியிருந்தேன். "முடிவு" என்பது நல்ல தமிழ்ச் சொல்தான் என்றாலும், இவ்வாறான இடங்களில் "நிறைவேறியது" என எழுதுவது நல்லது எனக் கூறி இதுபோன்ற வேறு பலவற்றையும் விளக்கிச் சொன்னார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த விடயமாயிருந்தாலும் இப்பொழுதும் எழுதும்போது இது எனக்கு ஞாபகம் வரும். பல இடங்களில் துணைவினையாக வரும் இந்த "படுத்தல்", "படுத்துதல்" போன்றவையும் இதுபோலத்தான் நல்ல உணர்வைத் தருவதில்லை. மயூரநாதன் 17:14, 14 டிசம்பர் 2008 (UTC)
தங்களின் சந்திபுக் குறிந்த்து சுந்தர் மிகவும் மகிழ்ச்சி :)--உமாபதி \பேச்சு 11:27, 20 டிசம்பர் 2008 (UTC)

Latin Vs English தொகு

--Natkeeran 04:37, 18 டிசம்பர் 2008 (UTC)

அண்மைய மாற்றங்கள் - முதல் 100 பக்கங்கள் இணைப்பு தொழில்படவில்லை....நிக்கவும்...நன்றி தொகு

--Natkeeran 23:28, 22 டிசம்பர் 2008 (UTC)

அந்தத் தொடுப்பை நீக்கி, ஆலமரத்தடிக்கான தொடுப்பைச் சேர்த்துள்ளேன்--ரவி 11:39, 26 டிசம்பர் 2008 (UTC)